திங்கள், 10 ஆகஸ்ட், 2015

துறவறம்

இன்றையதலைப்பின் உள் அர்த்தத்தைகண்டிப்பாகஅனைவரும் புரிந்துவைத்திருத்தல் வேண்டும். 
சும்மாசும்மாயாரையாவதுதுறவிஇ சாமிஎன்றுஅழைக்காதீர்கள். துறவிக்கானஒருசிலகடமைகளையாவதுஅவர்கள் சரியாகநிறைவேற்றுகிறார்களாஎன்றுபார்த்துவிட்டுஅழையுங்கள். அப்படிஎன்னகடமைகள் அவர்களுக்கு இருக்கின்றன? 
துறவுஎன்பதுதுறத்தல் அல்லது இழத்தல்.துறத்தல் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். கோயிலில் இருக்கும் துறவிமணவாழ்க்கையைத் துறக்கிறார். திருமணமானகணவன் தன் சுகங்களைத் துறக்கிறான். மனைவிதன் ஆசைகளைத் துறக்கிறாள். பிள்ளைகள் சிலநேரம் அவர்கள் விருப்பங்களைத் துறக்கின்றனர். வேலைசெய்பவர்கள் தங்கள் ஆற்றலைத்துறக்கின்றனர். இப்படிதுறத்தல் ஒவ்வொருவர்வாழ்விலும்இ ஒவ்வொருகட்டத்திலும் நிகழ்கின்றது. 
துறத்தல் என்பதுமுக்கியமாகநம்மிடம் இல்லாதஒன்றைத் துறத்தல் அல்ல. நம்மிடம் இருப்பதில் சிறந்ததைத் துறத்தல்.
இந்தஉலகில் உள்ளஒவ்வொரு ஜீவனும் ஏதாவதுஒன்றைத் துறக்கத் தான் செய்கின்றன. உதாரணத்திற்குஆடு கோழிபோன்றவைத் தன்னைத் துறப்பதனால் தான் நாம் அதன் மாமிசத்தைச் சுவைத்துச் சாப்பிடுகிறோம். இப்படிசொன்னால் அடுக்கிக் கொண்டேபோகலாம்.
துறத்தலின் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளும் போதுநம் உறவுகளுக்குள்ளும் சண்டைகள் வருவதில்லை. என்னவள் எனக்காக இதைச் செய்கிறாள் என்றுஅவனுமஇ; என்னவன் எனக்காகஎல்லாம் செய்கின்றான் என்றுஅவளும் உணர்ந்துகொள்வதேஇதன் ஆரம்பம்.
நானும் நிறையநேரங்களில் நினைப்பதுஉண்டு. நான் தான் எல்லாவற்றையும் துறக்கிறேன். ஆனால் எனக்காகஎதையும் விட்டுக் கொடுக்காதநிலைதான் மற்றவரிடம் உள்ளதுஎன்று. ஆனால் பிரான்சிஸ் அசிசியாரின் ஜெபத்தைவாசித்தபிறகுஇநான் என்னையேமாற்றிக் கொள்ளவேண்டுமென்றுநினைத்தேன். 
ஜெபத்தில் எனக்குமிகவும் பிடித்தவரிகள்: 'பிறர் என்னைப் புரிந்துகொள்ளவிரும்புவதைவிடஇநான் பிறரைப் புரிந்துகொள்ளவும்.... அன்பைப் பெறவிரும்புவதைவிடஇபிறருக்குஅன்பைஅளிக்கவும் எனக்குகற்றுத்தாரும்'
என் துறவறத்தைநான் இதிலிருந்துஆரம்பிக்கிறேன்.

கருத்துகள் இல்லை: