“A Break in the Chain” By Chris d’Lacey
இன்று எனது அண்ணியின் பையன் எனக்குப் படிக்கக் கொடுத்த ஒரு அருமையான புத்தகம். இந்தப் புத்தகத்திலிருந்து நிறைய புது வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். பல வாரங்களுக்குப் பிறகு படிக்கும் ஒரு ஆங்கிலப் புத்தகம். அருமையாக இருந்தது. வார்த்தைகளைக் கையாண்ட விதம்இ நன்றாக இருந்தது. துருவக் கரடிகளுக்கு கடலில் கலக்கப்படும் எண்ணெய்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும்;இ அதனால் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுவது பற்றியும் அழகாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆசிரியர். துருவக் கரடிகளைக் காப்பாற்ற மாணவர்கள் எடுக்கும் முயற்சி... இது தான் கதை. நிறைய நாவல்களைப் படிக்க வேண்டும். நானும் ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுத வேண்டும். சிரிக்காதீங்க பா.... என் நண்பன் கூட நான் ஆங்கிலத்தில் ஏதாவது எழுத வேண்டும் என்று சொன்னால் போதும்இ உடனே சிரித்துவிடுவான். அவனைப் போல் சிரிப்பது போல் தெரிகிறது? பாருங்கள். நானும் ஒரு நாள் கண்டிப்பாக ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிறேன். முயன்றால் முடியாததது ஒன்றுமில்லையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக