செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

நண்பர்கள் தினம்...


இன்று, உலக நண்பர்கள் தினம். 'நண்பர்கள்' – நாம் நன்றாய் இருக்க வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்கள். நம்மைப் புரிந்து கொள்ளும் இ நம் உடன் பிறவா சகோதர, சகோதரிகள். 'நண்பன்' என்ற வார்த்தையைக் கேட்கும் போது.. எனக்குள் தோன்றுவது இது தான். 'தன் நண்பனுக்காய் உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு இல்லை' என்பது தான். நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதா? மனைவிக்காக பிள்ளைகளுக்காக என்றுச் சொல்லவில்லை. நண்பன் என்று கூறுகிறது விவிலியம். ஏன்ன ஆச்சரியம்? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களா நண்பர்கள்! ஆம்... முக்கியம் தான். உன் நண்பனைச் சொல்... நீ யார் என்று கூறுகிறேன் என்ற வழக்குச் சொற்றொடர் ஒன்று உண்டு. சிறு வயதில் அதற்கான அர்த்தம் புரியவில்லை. ஆனால் இப்போது உணர முடிகிறது அதன் அர்த்தத்தை. உண்மையாகவே நம் நண்பர்களை வைத்து நம்மை யார் என்று கணித்துவிடலாம். இன்றைய தினம் சிறப்பாக என் சிறு வயது முதல் எனக்கு நண்பர்களாய் இருந்த என் தோழிகளை எண்ணிப் பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்ல விழைகின்றேன்.
என் பள்ளித் தோழிகள் அர்ச்சனா, சிவசங்கரி என் கல்லூரித் தோழிகள்(எல்லோரும் என் இனிய நண்பர்கள் தான்) குறிப்பாக லலிதா, மயில் கிறிஸ்டி. எனக்கு வழிகாட்டிய சில நண்பர்களும் உள்ளனர்.
இவர்களைத் தவிர என் தங்கையும் என் மம்மியும் எனக்கு உற்ற தோழிகள். நண்பர்கள் தினமான இன்று அனைவரையும் நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததற்கு இறைவனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை: