இன்று சுதந்திர தினம். சுதந்திர தினம் என்றதும் நம் நினைவிற்கு வருவது, நம் நாடு விடுதலை அடைவதற்காகப் பாடுபட்ட தலைவர்கள், அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, அனைத்துமே தான். இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நமக்கு, நம் முன்னோர்கள், அவர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தனர். ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் அந்தச் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று பார்த்தால், பத்தில் இருவராகத் தான் இருப்பர். நம் ஒற்றுமையை உணர்வைக் கண்டு ஆங்கிலேயர்களே நமக்கு விடுதலை கொடுத்துவிட்டனர். ஆனால் நாம் நமக்காக உழைக்கும் நமக்குக் கீழ் உழைக்கும் நம் வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கிறோமா? ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம் என்றால் நமக்குக் கீழ் உள்ளவர்களைச் சமமாகப் பாவிக்கிறோமா? பள்ளியில் நம்முடன் படிக்கும் எல்லா மாணவர்களுடனும் ஒரே கண்ணோட்டத்துடன் பழகுகிறேனா? நம்மையே நாம் கேள்வி கேட்டுப் பார்ப்போம். அனைத்துக் கேள்விகளுக்கும் இல்லை என்று தான் பதில் வரும். இதில் சுதந்திரம் பெற்று விட்டதற்கு அர்த்தமில்லை. என்று எல்லா கேள்விகளுக்கும் பதில் ஆம் என்று வருகிறதோ அன்று நாம் மகிழ்வுடன் கொண்டாடுவோம் நம் சுதந்திர தினத்தை 'முழக்கத்துடன்'....
சுதந்திரம் என்பது நம் பேச்சில் மட்டும் இருப்பது அல்ல. நம் உணர்வில் கலந்த ஒன்றாக இருக்கும் போது தான் அது உண்மையாக சுதந்திர தினம்.
சுதந்திரம் என்பது நம் பேச்சில் மட்டும் இருப்பது அல்ல. நம் உணர்வில் கலந்த ஒன்றாக இருக்கும் போது தான் அது உண்மையாக சுதந்திர தினம்.