செவ்வாய், 30 ஜூன், 2020

கடற்கன்னி ஆசை...

கடற்கன்னி என்ற வார்த்தையை

எனக்கு அறிமுகம் செய்தவள்...

அதிலும் கடற்கன்னியைக் காண்பிக்கிறேன் 

என்று ஆசை காட்டியவள்...

கடற்கன்னி என்றும் என் மனதில்

கனவுக்கன்னியாய்!!!

இனியபாரதி. 

திங்கள், 29 ஜூன், 2020

என்றும் இனிமை...

அவள் அருகில் இருக்கும்

ஒவ்வொரு நொடியும்

அவன் உணரும் ஒன்று

"இனிமை"

அவள் அருகில் இல்லாமல்

அவன் மனம் உணரும்

ஒவ்வொரு நொடியும்

"தனிமை"


இனியபாரதி. 


ஞாயிறு, 28 ஜூன், 2020

கானல் நீர்... காணாமல் போகும் நீர்...

கானல் நீர் என்பது

நம் கண்முன் தோன்றும்

பிரம்மை எனத் தெரிந்தும்

அதைக் கானல் 'நீர்' என்று அழைக்கிறோம்...

அன்பு கூட அப்படித்தான்!!

அன்பு என்ற பெயரை வைத்துக் கொண்டு

'அன்பு' காட்டாமல் இருந்து விடும்...

இனியபாரதி. 


சனி, 27 ஜூன், 2020

கடந்து போனாலும்...

சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை
அவன் நிலை அறிய!!!


சொல்லாமலும் புரியும்
அவன் மனம்!!!

இருந்தாலும் ஏற்க மறுக்கும்
அவள் உள்ளம்!!!

இவை எல்லாம் கடந்து போனாலும்
உறுதியாய் இருக்கும் அவன் நெஞ்சம்!!!

இனியபாரதி. 


வெள்ளி, 26 ஜூன், 2020

அழகு...

என் மனதும் ஏனோ

என்னிடம் இல்லை...

வேண்டியே விரும்பியே

மாட்டிக் கொண்டேனே!!!

அழகான பாடல் வரிகள்!!!

வியாழன், 25 ஜூன், 2020

களவும் கற்று...

ஒருவகையான களவு கொள்ள 

ஆசை கொண்ட அவனுக்கு

நிதானமாய்

கற்றுத் தருகிறாள்

அந்த வித்தையை!!!

களவும் கற்று மற!!! 

இனியபாரதி. 

புதன், 24 ஜூன், 2020

எல்லாம் இருக்கும்...

கடினம் என்று மறுக்காமல்

விடாமுயற்சியுடன்

மேற் கொள்ளும் ஒவ்வொன்றிலும்

நம்பிக்கை இருக்கும்....

இனியபாரதி. 

செவ்வாய், 23 ஜூன், 2020

தன்னைத் தந்து...

தன்னைத் தந்து

தாயகம் காக்கும்

நம் இராணுவ வீரர்கள்

என்றும் பாதுகாப்புடன் வாழ

அனைவரும் ஒன்றுகூடி

இணைந்து வேண்டுவோம் இறைவனிடம்!!!!

இனியபாரதி. 

திங்கள், 22 ஜூன், 2020

கற்றுக் கொள்..

தேவைப்படும் இடங்களில்

கற்பித்தலும்

தேவை இல்லாத இடங்களில்

கற்றலும் தேவை...


இனியபாரதி. 

ஞாயிறு, 21 ஜூன், 2020

அழகு...

அவன் கொடுக்கும் 

வலிகளைத் தாங்கிக் கொள்ளும்

சக்தி ஒரு அழகு!!!

அவன் கோபப்படும் போது

எரிச்சல் அடையாமல் 

பதில் சொல்வது ஒரு அழகு!!!

அவன் அன்பைப்

புரிந்து கொண்டாலும்

அப்பப்போ புரியாமல் இருப்பது போல்

நடிப்பது அழகு!!!

இனியபாரதி. 

சனி, 20 ஜூன், 2020

சந்திப்பு...

கொஞ்சம் தாமதம் கொண்டதால்

அவளைப் பார்க்க முடியாமல்

இருந்த தருணம்...

சண்டையிட்டுக் கொண்டதால்

அவளிடம் நேராகப்

பேச முடியாத தருணம்...

கொஞ்சல் கேட்டு

வெட்கமடைந்து முகத்தை

மூடிக் கொண்ட தருணம்...

எல்லாம் அவன் சந்திப்பில்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 19 ஜூன், 2020

கடமையைப் போற்று...

கடமையைக் கண் எனப் போற்றி

அதைக் கடைபிடித்து வந்தால்

உன் வாழ்வில்

நிச்சயம் முன்னேற்றம் வரும்!!!


இனியபாரதி. 

வியாழன், 18 ஜூன், 2020

சந்தேகம் எல்லாம்...

அவன் சந்தேகம்

நீண்டது என்பது

அவளுக்குத் தெரிந்திருந்தும்

பொறுமையாய் பதில் சொல்ல

அவளால் மட்டுமே முடியும்!!!

இனியபாரதி. 

புதன், 17 ஜூன், 2020

அவள் புலமை...

அவளின் புலமை அறிந்து

வியந்து பாராட்டாமல்

இருக்க முடியவில்லை...

அவள் என்றும் ஒரு ஞானி தான்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 16 ஜூன், 2020

சிந்தனையும் கருத்தும்...

என் மனம் ஏதாவது ஒன்றை எண்ணிக் கொண்டிருக்கும் போது

என் கை ஏதோ ஒரு வேலையைச் செய்கிறது...

என் கை செய்யும் வேலைக்கு என் கண்கள் ஒத்துழைப்புத் தருவதில்லை....

இப்படிக் கட்டுப்பாடற்று அதது
தன் இஷ்டத்திற்கு இருக்க
என் உடல் என்ன பொம்மையா???

இனியபாரதி. 

திங்கள், 15 ஜூன், 2020

கருணை மழை...

பெய்யும் என்று எதிர்பார்த்து

வறண்டு கிடக்கும் நிலம்

அண்ணாந்து பார்த்து

ஆவலாய் இருக்கும் நொடி

இந்தக் கருணை மழைக்கான வருகை!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 14 ஜூன், 2020

நீரும் நெருப்பும்....

சேர்ந்து இருக்கும்

அவளும் அவனும்

நீரும் நெருப்பும் போல் இருந்தால் 

வாழ்க்கை எப்படி இருக்கும்?


அன்பு இருக்கும் அவளிடம்
அடிமைத்தனம் இருக்கும் அவனிடம்

பாசம் இருக்கும் அவளிடம்
பாசாங்கு இருக்கும் அவனிடம்

இப்படிப் பல இருக்கும் இருவருக்கும்...

அவள் நீராய் இருக்கும் போது
அவன் பனிக்கட்டியாய் மாறி
அவளை இறுக்கிவிடுதலே சால்பு...

இனியபாரதி. 

சனி, 13 ஜூன், 2020

உணர்கிறேன்...

கரும்பு இனிக்கும் என்பதை
நான் சுவைக்கும் போது தான் உணர்கிறேன்...

அன்பு அழகு என்பதை
உன்னுடன் இருக்கும் போது தான்
உணர்கிறேன்....

இனியபாரதி. 

வெள்ளி, 12 ஜூன், 2020

நானும் என் அழகும்...

அவள் முகம் பார்த்துத் தான்
என் அழகை உணர்ந்து கொள்கிறேன்...

அவள் அன்பை உணர்ந்து தான்
என் அன்பின் ஆழம் அறிகிறேன்...

அவள் அக்கறையை நினைத்துத் தான்
எனக்கு அவள் மீதான பொறுப்பை உணர்கிறேன்...

நான் என்னை அறிய...

அழகும்

அறிவுமான

அவள் தேவை...

இனியபாரதி. 

வியாழன், 11 ஜூன், 2020

இருக்கும் இயக்கம்...

தினமும் தொடரும் 

அவளின் பயணம்

ஒரு அழகான பூஞ்சோலையின் வழி....

இனியபாரதி. 

புதன், 10 ஜூன், 2020

தென்றல் வந்தால்...

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணம்மோ!!!

அழகிய பாடல்....

தென்றல் தீண்டும் நேரம்
தேன் இனிமை போல்
அசைந்தாடிக் கொண்டிருக்கும் 
அழகிய மரம்!!!


இனியபாரதி. 

செவ்வாய், 9 ஜூன், 2020

குறைக்க இயலா அன்பு...

இது மட்டும் தான் என்று முடிவெடுத்த பிறகு
வேறு ஒன்றைப் பற்றியும் எண்ணத் தோன்றவில்லை...

அதுபோன்ற எண்ணம் கனவில் கூட நிகழா வண்ணம்
கவனம் கொள்கிறான் அவன்...

ஆனால்...

அவள் மனம் மட்டும் எப்படி கல் போல் இருக்கும் என்பதில்
ஆச்சர்யம் அவனுக்கு!!!


இனியபாரதி. 




திங்கள், 8 ஜூன், 2020

காணாமல் கண்ட...

படைப்பு முழுவதும் சுற்றிவிட்ட மகிழ்வு...

அவள் பெயர் சொல்லும் போது!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 7 ஜூன், 2020

காத்திருந்தால்... எதிர் பார்த்திருந்தால்...

எதையும் இழக்கத் துடிக்கும் மனம்

யாரையும் பொருட்படுத்தாது...

இழந்து விட்ட மனம்

எதையும் தேடி அலையாது...

இழக்க மாட்டேன் என்ற நம்பிக்கையில்

தினமும் காத்திருக்கும் மனம் மட்டுமே

எதிர் பார்த்து பார்த்து

தன் வாழ்வையே இழந்து விடும்...

இனியபாரதி. 

சனி, 6 ஜூன், 2020

இதுவும் கடந்து போகும்...

சில நேரங்களில்

தனிமையின் வாட்டுதலை விட

வேறு ஒன்றும் துக்கம் தருவதாய் இருக்காது....

மன நிம்மதி அற்றுப் போதல்...

குழப்ப மனநிலை...

தூக்கம் சரியாக வராமை...

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் அடுத்த நாள் பயணம் தொடர்கிறது!!!

இனியபாரதி. 

வெள்ளி, 5 ஜூன், 2020

கோபம் ஒரு வரமா?

கோபம் இருக்கும் இடத்தில்
குணம் இருக்கும் என்பார்கள்!!!

அப்போ...

கோபம் கொள்ளவில்லை என்றால்
குணம் இல்லை என்று தானே அர்த்தம்?

இதை எப்படி எடுத்துக் கொள்வது?

கோபப்படாமல் அமைதியாகப் பேசினால்
நல்லவன் என்கிறது உலகம்...

கோபத்தைக் காட்டினால் கோபக்காரன் என்கிறது உலகம்...

உண்மை என்னவென்றால்
கோபம் வந்தால் உடனே காட்டி விட்டு
அடுத்த வேலையை கவனிக்கத் தொடங்குவதால்
நமக்கு மன அழுத்தம் வராது...

கோபத்தைக் வைத்துக் கொண்டு 
நமக்குள் புளுங்குவதைவிட
அதை வெளிப்படுத்திவிடுவது சாலச்சிறந்தது...

இதனால் வரும் கோபக்காரன் பட்டம் பெருமையே!!!

இனியபாரதி. 

வியாழன், 4 ஜூன், 2020

காட்டிக் கொள்ளா அன்பு....

அவள் அருகில் இருப்பது மிகவும் பிடித்திருந்தும்
அவள் இருப்பது பிடிக்காதது போல் நடிக்கும் அவன் கோபம்!!!

அவள் யாரிடம் பேசினாலும் கோபப்படாதது போல் நடித்துவிட்டு
உள்ளுக்குள் அவர்கள் மீது எழும் எரிச்சல்!!!

அவள் பார்ப்பது, கேட்பது என்று எல்லாமுமே அவன் தான் என்று நினைக்க வைக்க வேண்டும்!!!

ஆனால் அது எப்படி என்று தான் அவனுக்குத் தெரியவில்லை!!!

இனியபாரதி. 

புதன், 3 ஜூன், 2020

பொறுமையின் சிறப்பு....



நான் நினைத்த எதுவும் உண்மை இல்லை என்று அறிந்தவுடன்
கதறி அழுது என் தவறை உணரத் தோன்றுகின்றது... 

நான் இவ்வளவு நாட்கள் முட்டாளாய் இருந்ததை எண்ணி!!!

நான் ஏன் அடிமையாய் இருந்தேன்?

நான் ஏன் அடிமையாய் இருக்கிறேன்?

நான் ஏன் அடிமையாய் இருக்க வேண்டும்?

எனக்குள் ஒரு உந்துசக்தியைக் கொடுத்த என் அன்பு!!!

நானும் என்னை மாற்றிக் கொண்டு

எதையும் பொறுமையாய் சாதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 2 ஜூன், 2020

அன்பு மட்டுமே...

உலகில் பல போராட்டங்களைச் சந்திக்கும் இந்த உள்ளம்
கடைசியில் தேடுவது என்னவோ
அன்பு மொழிகளைத் தான்...

இனியபாரதி. 

திங்கள், 1 ஜூன், 2020

நலமா!!!

நீ நலமா என்று ஆயிரம் உறவுகள் விசாரிக்கும்...

நீ நலமாய் இருக்கிறாய் தானே என்று
உன் குடும்பம் விசாரிக்கும்...

உன் நலனைக் குறித்த விசாரணையை
உன்னால் மட்டுமே செய்ய முடியும்...

'உள்ளம்'

இனியபாரதி.