சனி, 29 பிப்ரவரி, 2020

என் பக்கமும்...

என்றும் என்னைக் கைவிடா இறைவன்
இன்றும் என்னை அழகாய் 
வழிநடத்திய ஒவ்வொரு செயல்களுக்கும் நன்றி இறைவா!!!

இனியபாரதி.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

மெய் மறந்து போனேன்...

அவள் எனக்காக விட்டுச் சென்றது
இரண்டு மட்டும் தான்...

அவள் ஞாபகங்கள்!!!

அவள் கருவண்டு!!!


அவளின் ஞாபகம் என்னைத் துளைக்கும் போது
என் ஆறுதலாய் இருப்பது
அவள் கருவண்டு மட்டுமே....


இனியபாரதி. 

வியாழன், 27 பிப்ரவரி, 2020

காத்து...

அவள் பேசும் போது
அவள் வாய்க் குழல் 
அசைவது கூடத் தெரியாமல்
காத்து அடிப்பது போல்
ஏழு ஸ்வரங்களாய்
குரல் மெல்லிசை ஆகின்றது!!!


இனியபாரதி.  

புதன், 26 பிப்ரவரி, 2020

அன்றன்று...

கொடுக்கும் பல பொருள்கள்
மதிப்பிழந்து போகலாம்
சில கால முடிவில்...

அவள் கொடுத்த நினைவுகள்
என்றும் என் நெஞ்சில் 
சித்திர எழுத்துகளாய்...

அன்று வந்தது போல்
தினமும் வந்து செய்கின்றன....

இனியபாரதி. 

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

இதுவும் கடந்து போகும்....

எனக்கென்று நிரந்தரம் என்று
சொல்லிக் கொள்ள முடியாத இவ்வுலகில்...
நீ மட்டும் என்னுடையவள் என்று
சொல்லிக் கொள்ள எப்படி முடியும்?

 இனியபாரதி. 

திங்கள், 24 பிப்ரவரி, 2020

கண்டிப்பு...

அவளைக் கண்டித்த மறுநிமிடம்
நான் எனக்குள் சொல்லிக் கொள்வது...

"நீயும் அவளை நேசிக்கும் தவறைத் தானே செய்கிறாய் என்று!"

இனியபாரதி. 

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

பிடிக்கும் என்று...

பிடிக்கும் என்று நினைத்து
நான் செய்யும் ஒவ்வொரு செயலும்
என்றும் அவளுக்குப் பிடிக்காமல் போவதே
நான் அவளை அறிந்து கொள்ளாததன்
அடையாளம் தான்!!!

இனியபாரதி. 

சனி, 22 பிப்ரவரி, 2020

தன்னைத் தானே...

தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு
அவளைப் பற்றி நினைக்காதது போல் 
நடிக்கும் மனம்
 உள்ளுக்குள் அழும் அழுகை
அவன் மட்டும் அறிந்ததே!!!


இனியபாரதி. 

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

குட்டி செல்லம்...

அடுக்கிக் கொண்டே போகும்
உன் ஆசைகள்...
அதைக் கேட்கும்
என் காதுகள்...
எப்போது நிறைவேற்றலாம்
என்று துடிக்கும் மனம்...

இனியபாரதி. 

வியாழன், 20 பிப்ரவரி, 2020

யோசிக்க மட்டும் அல்ல...

நான் எனது தரத்தை
நான் உடுத்தும் உடைகளால்
நிர்ணயிக்க விரும்பவில்லை....

நான் செல்லும் மகிழுந்துகளால்
முடிவு செய்யவும் நினைக்கவில்லை...

ஒருவேளை பசி ஆரா நிலையில் இருக்கும்
என் அன்பு நண்பனுக்கு 
எந்த வகையில் உதவினேன் என்பதில் தான் இருக்கிறது...


இனியபாரதி. 

புதன், 19 பிப்ரவரி, 2020

நிசப்தம்...

பாஷை புரியா ஒரு உலகில்
இரண்டு நிமிட பேச்சு
அவர்கள் கண்களுக்கு
வியப்பளிக்கிறது!!!

கருப்பையில் குழந்தை!!!

இனியபாரதி. 

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

வேண்டியது எல்லாம்...

அவள் வேண்டும் எல்லாம் 
கிடைக்க வேண்டும் என்று அவனும்...

அவன் வேண்டும் எல்லாம்
கிடைக்க வேண்டும் என்று அவளும்...

வேண்டுதல் செய்வது தான்
"அன்பு போல!!!"


இனியபாரதி. 

திங்கள், 17 பிப்ரவரி, 2020

கவிதை...

உன்னைப் புகழ்வது மட்டும்
என் கவிதைக்கு அழகு அல்ல...

உன்னைப் பற்றி நினைக்கத்
தூண்டுவதும் கூட அழகு தான்....

இனியபாரதி. 

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

மின்னல் வேகம்...

கலவரம் மிகுந்த பகுதி
அடர்ந்த காடு
ஆள் ஆரவாரம் அற்ற இடம்
புயல் தென்றலாக வீசும் சூழல்
அடைமழை காலம்

யாரும் அறிய நேரத்தில்
மின்னல் வேகத்தில்
வந்து சென்றாள் அவள்
"வானவில்லாக"

இனியபாரதி. 

சனி, 15 பிப்ரவரி, 2020

காகிதக் கப்பல்...

காகிதக் கப்பல்
கவிழ்ந்து விடும்
என்று தெரிந்தாலும்
அதிலும் பயணம் செய்ய ஆசைப்படுகிறேன்.

கப்பலும் கற்பனையே...
என் ஆசையும் கற்பனையே...

இனியபாரதி.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

என்றும் நீடிக்க...

என்றும் நீடிக்க ஆசையே...

அன்புத் தாயின் மடியில் உறக்கம்
ஆறைந்து வருடங்கள் கழித்து....

பசத் தந்தையின்
பசுமையான உரையாடல்கள்...

அரவணைக்கும் அண்ணனின்
ஆறுதல் வார்த்தைகள்....

குட்டித் தம்பியின் 
குறும்புச் சேட்டைகள்....

துறுதுறு தங்கையின்
துள்ளல் சண்டைகள்...

அதட்டும் அக்காளின்
அன்பு மொழிகள்...

இனியபாரதி. 



வியாழன், 13 பிப்ரவரி, 2020

அடையாளப்படுத்த...

சேர்ந்து இருந்து
சண்டையிடும் அன்பும் உண்டு...

சண்டையிட்டு பிரிந்து
செல்லும் அன்பும் உண்டு...

தலைமயிர் கோதி
நெற்றி முத்தமிட்டு 
கொஞ்சும் அன்பும் உண்டு...

பொறுத்து வாழும் அன்பும் உண்டு...

பொறாமைப் பட 
வைக்கும் அன்பும் உண்டு...

தள்ளி வாழும் அன்பும் உண்டு...

தனியே விடா அன்பும் உண்டு...

தவிக்க விடும் அன்பும் உண்டு...

என்றும் இணைந்திருக்கும் அன்பும் உண்டு...

அலைபேசி வழி அன்பும் உண்டு...

முகம் காணா அன்பும் உண்டு...

கண்ணீர் சிந்தும் அன்பும் உண்டு...

கண்ணீர் வர வைக்கும் அன்பும் உண்டு...

கடமைக்கென்று அன்பும் உண்டு...

உரிமை கொடுக்கும் அன்பும் உண்டு...

உரிமை எடுக்கும் அன்பும் உண்டு...

உல்லாசப்படும் அன்பும் உண்டு...

உற்சாகப்படுத்தும் அன்பும் உண்டு...

அரவணைக்கும் அன்பும் உண்டு...

எந்த வகையில் அன்பு செய்தாலும்
அன்பு அன்பு தான்!!!

யாராலும் அழிக்க முடியா
அழகிய காவியம்!!!!

அனைவருக்கும் அன்பு தின வாழ்த்துகள்.

இனியபாரதி.

புதன், 12 பிப்ரவரி, 2020

முன்னுரையே...

என்றும் தொடக்கமாய் இருக்கும்
அவள் திடீரென
முடிவாகிப் போகும்
அந்த காலம்
இலைஉதிர் காலம்
என்று தனக்குள் சொல்லிக் கொள்ளும் காலம்
இனிமையான காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்
அவன் மனது!!!


இனியபாரதி.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

கொஞ்சல்களும் கோபங்களும்...

கொஞ்சல்களும் கோபங்களும்
குறைந்து போன நிலையில்
என்ன செய்வது என்று அறியாது
தினமும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு
உன் ஞாபகங்களை அசைபோடும்
அந்த நிமிடங்களில் 
வரும் கண்ணீர் மட்டுமே
என் அன்பிற்கு சாட்சி!!!?


இனியபாரதி. 


திங்கள், 10 பிப்ரவரி, 2020

தாங்கிக் கொள்ள முடியா...

அவள் கொடுக்கும் வலிகள்
தாங்கிக் கொள்ள முடியாமல்
இருந்தால் கூட...

அவளை மறந்து
ஒரு நொடி கூட
இருக்க முடியா நிலையில்...

அவன் படும் வேதனை
அவனால் மட்டுமே உணர முடியும்!!!


இனியபாரதி. 

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

ஏமாற்றத்தை ஏற்க...

அளவுக்கு அதிகமான அன்பு
அகிலத்தையும் ஆளும்...
கோபமும் கொள்ளும்...

அதைப் புரியாமல்
தட்டிச் செல்லும் உறவுகள் 
பிரிவது நலமே!!!

இனியபாரதி. 

சனி, 8 பிப்ரவரி, 2020

கொண்டாட்டமே...

என்றும் இனிமையான நாளாய்
இருக்கும் போது
நமக்கும் மகிழ்ச்சி தான்...

ஆனால்...

கஷ்டங்களும்
துன்பங்களும்
வரும் போது மட்டும் துவண்டு விடாமல்
மன வலிமையுடன் 
சவால்களை எதிர் கொள்ளும் போது
ஒவ்வொரு நாளும்
கொண்டாட்டமே!!!

இனியபாரதி. 

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

நேற்றும் இன்றும்...

நேற்று நான் கண்ட கனவு
இன்று என் வாழ்வில் நிறைவேறுகிறது....

காரணம்...

என் கடின உழைப்பு மட்டும் அல்ல...

உன் உடனிருப்பும் தான்....


இனியபாரதி. 

வியாழன், 6 பிப்ரவரி, 2020

என் ஆற்றல் நீயே...

என் அன்பு உன் வழி தேடி
விழி மீது விழி வைத்துக் காத்திருப்பது
நீ அறிந்து தான் 
அனுதினமும் என்னை சந்தித்துச் செல்கிறாய் போல!!!


சூரியன்!!!

இனியபாரதி. 

புதன், 5 பிப்ரவரி, 2020

கருணைக் கடலே...

அன்பு என்னும் அமுதத்தினை
நீ எனக்களித்திட
நானும் பெற்று மகிழ்ந்து
அதன் சுவையில் மெய்மறந்து
என்னை முழுமையாய்
மூழ்கடிக்கும் அந்தக்காதலே
என் கருணைக் கடலே!!!

இனியபாரதி. 

நான் நடிகன் அல்ல...

நான் நடிகன் அல்ல என்று
தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும்
நடிகனாய் வாழ ஆசை இல்லை எனக்கு!!!


நடிக்கிறேன்
என் வாழ்க்கை நாடகம் அரங்கேற!!!


இனியபாரதி. 

கண்ணம்மா...

நான் சிறகில்லாமல் தவித்தாலும்
நீ தவிக்காமல் இருக்க என் சிறகைத் தருகிறேன்
நீ பரந்து செல்ல... 
கூட்டுப் பறவையாக அடைபட அல்ல... 

பறவை!!!

இனியபாரதி. 

திங்கள், 3 பிப்ரவரி, 2020

என்றும் இருக்கும்...

என்னோடு என்றும் இருப்பது என் உயிர் மட்டும் அல்ல....

அவளின் நினைவும் தான்!!!

இனியபாரதி. 

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

தேடி வரும்...

தேடி வரும் போது விலகிச் செல்வதும்...
விலகிச் செல்லும் போது தேடுவதும் தான்
அவளின் சுபாவம்.

இனியபாரதி. 

சனி, 1 பிப்ரவரி, 2020

என் தமிழ்...

தாயைப் போல்
என் தமிழையும் நேசிக்கிறேன்....

இனியபாரதி.