செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

கதவைத் திறந்து...

அறையின் உள்ளே அமர்ந்து
ஆண்டவனைத்
தேடினால் கூட
கிடைக்க மாட்டான்...

கதவைத் திறந்து வெளியே வந்து பார்...
ஆண்டவன் உன் அருகிலேயே
வந்து நிற்பான்...

இனியபாரதி.

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

இனியவை நாற்பது அல்ல...

உன்னில் இனியவை நாற்பது மட்டும் அல்ல....
கோடி உள்ளன...
அதை உணர்ந்து கொள்ள எனக்குத்தான்
பக்குவங்கள் நாற்பது தேவை!!!

இனியபாரதி.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

தெரிந்து கொள்ள...

உலகில் அறிந்தும் தெரிந்தும் கொள்ள முடியாத
பல விடயங்கள்
நம்மைச் சுற்றி மட்டும் அல்ல...

நம்மிலும்

நம் உற்றவர்களிடமும்

இருந்து கொண்டே தான் இருக்கின்றன....

இனியபாரதி.

சனி, 17 ஆகஸ்ட், 2019

பிரகாசம்...

நேற்றைய நினைவுகள் அழிந்து
இன்றைய நிஜங்கள் தொடர்ந்து
நாளைய நன்மைகள் மலர
என்றும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

இனியபாரதி.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

கலங்காமல்...

கலங்காமல் அவள் படும் பாடுகள்
சரித்திரம் பேசும்...

உறங்காமல் அவள் கண்கள்
ஒளி கொடுக்கும்...

அசராமல் இருக்கும் ஒவ்வொரு பொழுதும்
அவள் வசந்த காலங்கள்...

அயராது உழைக்கும் அவளிரு கைகள்...

சிந்தனை உயர்வாய்!
என்றும் அவள் மனத்தைப் போல!

இனியபாரதி.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

என் நேரப்படி...

என் நேரப்படி எப்போதும் உன்னுடன் இருப்பது தான் சுகம்...

உன் நேரப்படி எப்போதும் என்னைக் காக்க வைப்பது தான் சுகம்...

யார் நேரம் என்பதை விட...
யாருக்கான நேரம் என்று பார்க்கும் போது... நான் வென்றுவிடத் துடிக்கிறேன்...

அது எனக்கான நேரம் என்று!!!

இனியபாரதி.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

திருட்டுத்தனமாய்...

திருட்டுத்தனமாய் அவள் பார்க்கும் பொழுதுகள்...
என் கண்கள் வேலை செய்வது போல் நடிக்கும்...
உண்மையில் அவளை ரசித்துக் கொண்டு...

இனியபாரதி.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

கொடுத்த அனைத்தும்...

அவள் கொடுத்த
அன்பு,பாசம், அரவணைப்பு
அனைத்தும்
எனக்கானவைகளாய் இருந்ததால்
திருப்பித் தர மனம் இல்லாமல்
நானே வைத்துக் கொண்டேன்,
என் இதயக் கதவறையைப் பூட்டி...

இனியபாரதி.

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

எதற்காக?

அன்பும் அரவணைப்பும்
அவளிடம் இருந்து கற்றுக் கொண்டது தான்...

கற்றுக் கொண்ட பின் என்னால்
அவளை விட முடியாமல் தவிக்கிறேன்...

அவள் இவை இரண்டையும்
இழந்துவிட்டு நிற்கிறாள்!!!

இனியபாரதி.