செவ்வாய், 29 டிசம்பர், 2020

உணர வைத்தாய்...

அழகில் கர்வம் கொண்டேன்...
அழகிற்கு மதிப்பே இல்லை என்று உணர வைத்தாய்...


அறிவில் கர்வம் கொண்டேன்...
அது குறையவும் கூடும் என்பதை உணர வைத்தாய்...

பணத்தில் கர்வம் கொண்டேன்...
ஒருவேளைக்குக் கூட அதை உண்டு பசியாற்ற முடியாது என்பதை உணர வைத்தாய்...

செல்வத்தில் கர்வம் கொண்டேன்...
தேவைக்கு உதவாத அதுவும் வீணென உணர வைத்தாய்...

அன்பில் கர்வம் கொண்டேன்...
பிரிந்து சென்று அதுவும் பொய்யென உணர வைத்தாய்...

இனியபாரதி. 

திங்கள், 28 டிசம்பர், 2020

நல்ல பயணம்..

பல வண்ண நிறங்களில் தெருவிளக்குகள்...

பல வண்ண உடைகளில் மனிதர்கள்...

பல வண்ணங்களில் விற்பனையகங்கள்...

பல விதமான காட்சிகள்...

கடுமையான குளிர்காற்று...

ஒதுங்கக் கூட இடம் இல்லை...

வேகமான விரைகின்றன அவளின்  கால்கள்...

அவள் எதிர்காலத்தை நோக்கி...

இனியபாரதி. 

சனி, 26 டிசம்பர், 2020

கனாவும் காதலும்...

பாதிக் கனாவில் விழித்துக் கொண்டேன்...

பின்!!!

கனவில் கண்ட 

அவளின் அழகும்

அவள் முகமும்

என்னைத் தூங்கவிடவில்லை...

படுக்கையில் புரண்டதைத் தவிர

வேறு ஒன்றும் செய்யவில்லை நான்...

அந்த இரவு 

என் அலைபேசியின் அழைப்போசை...

யாரென்று எடுத்தால்...

என் தேவதையின் அழைப்பு...

ஆச்சரியம்!!!

நான் தூங்கவில்லை என்று அவளுக்கெப்படித் தெரியும்???

அழைப்பை ஏற்ற முதல் நொடி அவளிடம் இருந்து வந்தது...

"எனக்குத் தூக்கமே வரவில்லை...

அதனால் தான் உங்களை அழைத்தேன் என்று..."

இதுவும் ஒரு வகையான அன்பு போல...

எல்லோருக்கும் கிடைப்பதில்லை...

இனியபாரதி. 

வெள்ளி, 25 டிசம்பர், 2020

ஐம்புலன்களின் அழகியே....

என் அழகியே...

உன்னில் என் நிறைவைக் காண்கிறேன்...

உன்னில் என் தாய்மை உணர்கிறேன்...

உன்னில் என் துன்பம் மறக்கிறேன்...

நீ என் முதற்பொருள்...

நீயே என் எல்லாம்.

இனியபாரதி. 

புதன், 23 டிசம்பர், 2020

தெரிந்து கொள்...

கேளாமல்  கிடைத்ததால் என்னவோ

அவளின் அருமை கடைசி வரை

அவனால் உணரப்படவில்லை...

ஆனால்

அவளுக்கு அவன் மீதிருந்த அன்பும் குறையவில்லை...

அவனைப் பற்றிய நினைவும் அகலவில்லை...

அவன் நினைப்பதென்னவோ..

அவளும் மற்ற பெண்களைப் போல் தான் என்று...

காரணம்...

அவன் பழகிய பெண்கள் எல்லாம் அப்படித்தான்!!!


இனியபாரதி. 


செவ்வாய், 22 டிசம்பர், 2020

கவிதை வந்ததும்...

கவிதை வந்ததும்

காணாமல் போய்விட்டாள்

என் அழகுப் பதுமை!!!

வெட்கம் அவளை மட்டும் விட்டு வைத்ததா என்ன???

கவிதையின் வரிகளும்

அவள் வெட்கத்தைப் பற்றி பேசாமல் இல்லை...

புரியாமல் அவளும்...

புரிந்துவிட்ட நிலையில் நானும்...

இனியபாரதி. 

திங்கள், 21 டிசம்பர், 2020

கொடுக்காமலே இருந்திருக்கலாம்!!!

காலங்கள் கடந்தாலும்

அவள் கொடுத்த காயங்கள் மட்டும்

என்றும் அழியாது...

கொடுக்காமலே இருந்திருக்கலாம்

காயத்துடன் காதலையும் சேர்த்து...

இனியபாரதி. 


???

ஒருவரை நம்பி ஏமாறுவதை விட...

ஒருவரை நம்ப வைத்து ஏமாற்றுவது தான்

உச்சகட்ட "போலித்தனத்தின் வடிவம்..."


இனியபாரதி. 

அன்பை...

எங்கோ இருந்து கொண்டு

காட்டினேன் என் அன்பை...

அவளும் எங்கோ இருந்து கொண்டு

காட்டினாள் அவள் அன்பை....

"வேறு ஒருவனிடம்!!!"

இனியபாரதி.

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

ஒரு மாற்றம்...

என் அறையில் மாற்றம்...

என் உள்ள அறையின் எண்ணங்களில் மாற்றம்...

என் பாதைகளில் மாற்றம்...

என் வாழ்வில் மாற்றம்...

என்னை மேன்மைப்படுத்தவா?

இல்லை!!!

தனிமைப்படுத்தவா??

இனியபாரதி.

சனி, 19 டிசம்பர், 2020

தேடிய பாதை...

நீண்ட சாலை....

சாலை ஓரத்தில்...

பசேல் மரங்கள்...

மிதமான சாரல்....

குளிர்ந்த வானிலை...

மெல்லிய தென்றல்...

ஒரு கட்டத்தில் பிரியும் சாலை...

என் பாதை எது?

இனியபாரதி.


செவ்வாய், 1 டிசம்பர், 2020

கவிதையும் கனாவும்...

அவளுக்குத் தெரிந்த கவிதை எல்லாம்

ஒன்றே ஒன்று தான்...

கனாவில் வந்த அவனது திருஉருவம்...

இனியபாரதி.