சனி, 28 நவம்பர், 2020

கருணை வேண்டி...

உன்னை மட்டுமே தேடினேன்...

வாழ்வே நீயென நினைத்தேன்...

அதிகம் சிரித்தேன்...

அதிகம் அழுதேன்...

அதிகம் ஆறுதல் தேடினேன்...

சற்று ஓய்வு கொண்டேன்...

திரும்பிப் பார்த்தேன்...

காத்திருந்தேன்...

கவலை கொண்டேன்...

காரணம் தேடினேன்...

மன உளைச்சல் அடைந்தேன்...

மன்னிப்பு வேண்டினேன்...

தியாகம் செய்தேன்...

மரணம் வேண்டினேன்...

எது எனக்குக் கிடைத்தது?

"உன் கருணையைப் புகழ!!!"


இனியபாரதி.

வெள்ளி, 27 நவம்பர், 2020

சென்று வா...

"சென்று வா" என்று உடனடியாக என்னால் சொல்ல முடியவில்லை என்றாலும்,

நீ செல்ல வேண்டிய தூரம்
அதிகம் என்பதால் சம்மதிக்கிறேன்...

காரணம்,

நீ என்னிடம் திரும்பி வருவாய் என்ற நம்பிக்கை மட்டுமே!!!

இனியபாரதி. 

அவள் என் காதலி...

கண்டும் காணாமல் செல்கிறேன்...

விருப்பத்துடன் எப்போதும் உன்னை நோக்கியதில்லை...

செல்லும் வழி எல்லாம் நீ இருந்தாலும் 
நான் தேட நினைக்கவில்லை உன்னை...

என்னை நீ அன்பு செய்கிறாயா என்று கூட எனக்குத் தெரியவில்லை...

நான் கண்டு கொள்ளாத போதும்,

எனக்காய் நீ இருக்கிறாய் என்ற ஒரு திருப்தி மட்டும் 

என்றும் என்னுடன்...

"என் இனிய மனம்"

இனியபாரதி. 


வியாழன், 26 நவம்பர், 2020

காரணமே இல்லாமல்...

காரணமே இல்லாமல் 

சண்டை எழும் போது

அதைத் தட்டிக் கழிப்பதை விட,

இனி சண்டை எழாமல் இருக்க

நான் என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்கலாம்!!!

இனியபாரதி. 


காதலும் கடலும்...

கடல் அமைதியில் அழகு இல்லை...

காதலும் அமைதியில் அழகு காண்பதில்லை...

கடல் இரசிக்க வைக்கும்...

காதலும் அதைப் போலவே...

கடல் கோபத்தில் கொந்தளிக்கும்...

காதலும் அப்படியே!!

கடல் காத்திருக்கும் காதலர்கள் வருகைக்காய்...

காதலும் காத்திருக்கும் காதலர்கள் புரிதலுக்காய்...

இனியபாரதி. 

திங்கள், 23 நவம்பர், 2020

மறுக்கப்பட்ட.... மறைக்கப்பட்ட...

அன்பில் ஆயிரம் வகை!!!

அதில்,

மறுக்கப்பட்ட அன்பு ஒரு வகை.

மறைக்கப்பட்ட அன்பு ஒரு வகை.

இவ்விரண்டிலும் வலி மட்டும்

"அந்த வலிமையற்ற ஒருவருக்கே!!!"

இனியபாரதி. 

சனி, 21 நவம்பர், 2020

சிறு துரும்பும்...

சிறு துரும்பு கூட

பல் குத்த உதவும்

என்பது பழமொழி.

சிறு துரும்பு

எல்லாவற்றிற்கும் உதவும்

என்பது புதுமொழி...

இனியபாரதி. 


வெள்ளி, 20 நவம்பர், 2020

இனிக்கும்....

அப்படி ஒரு இடம் கிடைக்குமா???

அப்படி ஒரு நாள் வருமா???

அப்படி ஒரு அதிசயத்தை நான் காண்பேனா???

அப்படி ஒரு வரலாறு உருவாகுமா???

தெரியவில்லை...

ஆனால்

எல்லாம் இனிக்கும்.

இனியபாரதி. 

வியாழன், 19 நவம்பர், 2020

உன் அழகுக்கு இணையுண்டோ?

தெவிட்டினால் அருந்த முடியாத

அமிர்தத்திற்குக் கூட

அளவு இருக்கிறது...

உன் அழகை வருணிக்க

வரையறையே இல்லை...

எங்கிருந்து பெற்றாய்?

உன்னைப் பெற்றவள் பாக்கியம் பெற்றவளே!!!

இனியபாரதி. 

புதன், 18 நவம்பர், 2020

இப்படியுமா?

காரணம் தெரியாமல் வந்தாலும்

சில நாட்களில் காரணம் தெரிந்து விடும்...

அந்தக் காரணமே 

இறுதி வரை நிலைத்து நின்று

வெற்றி பெறும்!!!

இனியபாரதி. 

செவ்வாய், 17 நவம்பர், 2020

காந்தமும் அவள் கண்களும்...

காந்தம் ஈர்க்கும்!!

அவள் கண்களும் ஈர்க்கும்!!!

காந்த ஈர்ப்பு விசைக்கான 

காரணம் அறிந்து கொண்டேன்...

அவள் கண்களின் விசைக்கான

காரணம் அறியத் துடிக்கிறேன்...

இனியபாரதி. 

திங்கள், 16 நவம்பர், 2020

அடியோ... கடியோ....

அடியும் கடியும் ஒன்று தான்...

அவள் அருகில் இருந்தும்

அவள் அருகில் இல்லாமலும்

காரணம் ஒன்று தான்

???

அவளுக்கு வலிக்கப் போவதில்லை!!!

இனியபாரதி. 

சனி, 14 நவம்பர், 2020

அன்பின் ஒளி...

காண்பதும்

கேட்பதும்

உணர்வதும்

சில வேளைகளில் தவறலாம்...

ஆனால்

அன்பால் நிறைந்திருக்கும்

அந்த உள்ளம்

என்றும் நிலைபெற்று

ஒளிர்ந்து கொண்டு இருக்கும்...

இனியபாரதி. 

வியாழன், 12 நவம்பர், 2020

அவளின் குளுமை...

அவள் தலைமுடி என்னை வருடிச் சென்றதில்லை...

அவள் கால்களின் மென்மை நான் அறிந்ததில்லை...

அவள் இமைக்கும் பொழுதை நான் இரசித்ததில்லை...

அவள் அணைப்பின் ஸ்பரிசம் நான் உணர்ந்ததில்லை...

ஆனாலும் அவள் தரும் குளுமை தணியவில்லை...

இனியபாரதி. 

புதன், 11 நவம்பர், 2020

தன் ஒளி...

அவளும் அப்படித் தான்....

தன் ஒளி எப்படி பயன்படுத்தப்பட்டாலும்

எல்லோருக்கும் சமமாக ஒளி கொடுப்பாள்...

இவளைப் போல...

இனியபாரதி. 

திங்கள், 9 நவம்பர், 2020

குழந்தை போல...

குழந்தை....


எதைப் பற்றியும் யோசிக்காது....

மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கூட யோசிக்காது...

தன் அழகைப் பற்றி யோசிக்காது...

தன் அறிவைப் பற்றியும் நினைக்காது...

தன் செல்வச் செழிப்பைப் பற்றி சிந்திக்காது....

அது போல ஒரு வாழ்வு வேண்டும்...

இனியபாரதி. 

ஞாயிறு, 8 நவம்பர், 2020

பணம் இல்லாமல் ஒன்றுமில்லை....

வெற்றி 

தோல்வி

காதல்

அன்பு

பரிவு

கரிசனை

கௌரவம்

இன்னும் என்னென்னவோ கூட

பணத்தைக் கொண்டு தான் நிர்ணயிக்கப்படுகின்றன...

இனியபாரதி. 

சனி, 7 நவம்பர், 2020

அவள் மட்டும் தான் காரணம்....

சிறிது சிறிதாய் சேர்த்து வைத்த அன்பு...

அப்படியே அழிந்து போக அவள் மட்டும் தான் காரணம்...

அவளிடம் இருந்த எல்லாம் தவறு...

அவன் எதிர்பார்த்த எதுவும்

அவளிடம் இல்லாமல் இருந்ததும் தவறு...

இனியபாரதி.

வியாழன், 5 நவம்பர், 2020

அன்பு அம்பு...

அன்பு!!!

செய்வதெப்படி என்பது தெரியாது...

புரிந்து கொள்ளவும் தெரியாது...

நன்றாய் பதற்றமடையும்...

எதிலும் முடிவு எடுக்கத் தெரியாது...

கருணை காட்ட முடியாது...

காரணமும் கூற முடியாது...

கட்டுப்பாடு உண்டு...

கவலை இல்லை விட்டுச்சென்றாலும்...

கண்கள் கலங்கும் தேவையும் இல்லை...

இனியபாரதி.

புதன், 4 நவம்பர், 2020

இருந்து பார்க்கலாம்....

யாருடனும் பேசவோ பழகவோ கூடாது

என்று நினைக்கும் போதுதான்

உறவுகள் தேடி வரும்...

அவ்வாறு வரும் போது

விட்டுச் சென்ற உறவுகள்

கொடுத்த வலிகள்

நம்மிடம் வேறு யாரையும் அண்டவிடாது...

இனியபாரதி. 

கொடுமையா??? கொடூரமா???

பகைவரோ!!! நம்மைப் பழிப்பவரோ!!!

நமக்கு எதிராக இருக்கும் போது

கோபம் வருவதில்லை...

நம்மை அன்பு செய்வது போல்

நடித்துக் கொண்டு

நம்மை ஏமாற்றும் கொடியவர்களைத் தான்

என்ன செய்வது???

காலம் பதில் கூறும்..

இனியபாரதி. 

செவ்வாய், 3 நவம்பர், 2020

காற்றுக்குக் கிடைத்திருக்கிறது...

அவன் படுக்கையில்

அவனுடன் உறவாடும் 

அதிகாலைத் தென்றல்...

அவன் குளியலறை நீரில்

கரைந்திருக்கும் காற்று...

அவன் உணவில்

அவனுக்குள் செல்லும் காற்று...

அவன் செல்லும் இடமெல்லாம்

இருக்கும் காற்று...

எல்லாம் கொடுத்து வைத்திருக்கின்றன 

அவனுடன் இருப்பதற்கு!!!

இனியபாரதி. 

திங்கள், 2 நவம்பர், 2020

கருணையும் காதலும்....

கருணை என்பது

இல்லாத ஒருவருக்கு

என்னால் இயன்ற உதவி செய்வது....

காதல் என்பது

எத்தனை பேர் இருந்தாலும்

உனக்காக நான் இருக்கிறேன் என்று உணர்த்துவது...

இதில் பெருமை என்னவென்றால்...

காதல் என்று நினைத்தால்

அது கருணையாய் இருக்கும்...

கருணை என்ற இடத்தில்

காதலாய் இருக்கும்...

குழப்பம் யாரையும் விடுவதில்லை...

எல்லாவற்றையும் விட

தனிமையே சிறந்தது....

இனியபாரதி.  

ஞாயிறு, 1 நவம்பர், 2020

மயிலிறகுக் கண்ணழகா...

அழகுக்கு இலக்கணம்

மயில் இறகு...

அவன் கண்களும்

அதைப் போல் தான்...

இரண்டு மயில் இறகுகளை

அருகருகே வைத்தது போன்ற அவன் கண்கள்...

எப்படிப் பார்த்தாலும்

எவ்வளவு நேரம் பார்த்தாலும்

சலிப்பைத் தருவதே இல்லை...

இனியபாரதி.