வியாழன், 29 அக்டோபர், 2020

கருவாச்சி...

தெளிவற்ற அவள் முகம்

தேடும் என் மனம்...

தீண்டலோ...

கொஞ்சலோ...

காயம் கொடுக்கவில்லை....

உன் அழகில் சிறிதும் குறைவு இல்லை...

நெஞ்சம் எல்லாம் நீயாக...

தேடி வந்தேன் தனியாக...

கேட்பதெல்லாம் ஒரு வரமே...

என் கருவாச்சி என்றும் என் சொந்தமே!!!

இனியபாரதி. 

செவ்வாய், 27 அக்டோபர், 2020

வாசம் குன்றிய மலரே!!!

 பிறர் தோட்டத்தில் பூக்கும் அழகிய மலரை விட

உன் தோட்டத்தில் பூத்த வாசம் குன்றிய மலரே

என்றும் உனக்குச் சொந்தம்!!!


இனியபாரதி. 

கடின உள்ளம்....

 அவன் இல்லையே என்று ஏங்கித் தவித்த அவளுக்கு ஆறுதலாய் இருந்தவைகள் வெகுசில.... 


அவளுக்கு எல்லாத் திறமைகள் இருப்பினும் இப்படித் திரிகிறாளே என்று பிறர் இட்ட சாபம்... 


கேவலமாய் நோக்கிய சில பார்வைகள்... 


உச்சி வெயிலிலும் இருளடைந்து தெரிந்த அருகாமைகள்.... 


இவை எப்படி ஆறுதல் தந்தன???


இவை எல்லாம் அவள் அடிமனதில் ஆழமாய் பதிந்திருந்த அவன் அன்பை

ஆணிவேரோடு பிடுங்கி எறிய

அவள் உள்ளத்தை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தன.... 


இனியபாரதி.

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

பதிலன்பு...

அவள் அன்பு கோபமாய் இருந்தால்
என் அன்பு மெளனமாய் இருக்கும்...

அவள் அன்பு சந்தேகப்பட்டால்
என் அன்பு சமாதானப்படுத்தும்...

அவள் அன்பு பேசாமல் இருந்தால்
என் அன்பு அவளைப் பற்றியே சிந்திக்கும்...

அவள் அன்பு கர்வம் கொண்டால்
என் அன்பு காத்திருக்கும்...

அவள் அன்பு காயப்படுத்தினால்
என் அன்பு கண்ணீர் சிந்தும்...

அவள் அன்பு உண்மை கொடுத்தால்
என் அன்பு உயிரைக் கொடுக்கும்...

இனியபாரதி. 

வெள்ளி, 23 அக்டோபர், 2020

அவள் விழிகள் மட்டும் போதும்...

அவள் இருவிழிகளும்

அடிக்கடி என்னையே பார்ப்பது போன்ற உணர்வு...

அது உண்மையா!!! உணர்வா!!!

என்று உணர முடியாத அளவிற்கு!!!

இனியபாரதி.

புதன், 21 அக்டோபர், 2020

அளவே இல்லை...

அவளின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை...

தன்னைப் போல் தன்னவனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம்
அவளை வேறு யாருடனும் அண்ட விடவே இல்லை...

இனியபாரதி.

அவளின் பூஞ்சோலையில்...

அவளது பூஞ்சோலையில் பூத்த

அந்த மலருக்கு மட்டும்

அவள் மீது அளவுகடந்த பிரியம்

அந்த மலரை 

அவள் பறிப்பதும் இல்லை...

இரசிக்காமல் இருப்பதும் இல்லை...

வாடவிடுவதும் இல்லை...

யார் கண் பட்டதோ!!!

வழிபோக்கன் பறித்துச் சென்றுவிட்டான்...

இனியபாரதி. 

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது...

'நன்றி' என்று

ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது...

அந்த நன்றிக் கடனுக்காகவே

நான் வாழ்கிறேன்!!!

இனியபாரதி. 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

அள்ளித் தந்தவைகள்...

கேளாமல் அவள் அள்ளித் தந்தவைகளில் சில...

1. அன்பு

2. பொறுமை

3. அரவணைப்பு

4. ஆறுதல்

5. புன்சிரிப்பு

6. பேச்சு

இவைகளை எல்லாம் தோற்கடித்தது

அவளின் சில மணிநேர "மெளனம்"

இனியபாரதி. 

வியாழன், 1 அக்டோபர், 2020

எல்லாம் கற்பனையே....

அவளுக்கு உன் மீதிருந்த அன்பு...

உன் மீது காட்டிய அக்கறை...

உன்னைப் புகழ்ந்தது....

உன்னை அரவணைத்தது...

எல்லாம் கற்பனையே!!!

நிஜம் அல்ல...

இனியபாரதி.