புதன், 22 மே, 2019

இரண்டு தத்துவங்களும்...

நீ சொல்லும் இரண்டு தத்துவங்களும்
கேட்பதற்கு நன்றாய் இருந்தாலும்
நடைமுறையில் சாத்தியக் கூறுகள்
அதிகம் இல்லை தான்...

இருந்தும்...
அதை இரசிக்கச் செய்ய
நீ கொடுத்த உதாரணங்கள்
அழகு தான்...

இனியபாரதி.

செவ்வாய், 21 மே, 2019

அன்றொரு நாள்...

அவள் தருவது தான்
எனக்கு எல்லாம் என்று நான் நினைக்கும் பொழுதுகள்
எனக்கு ஏமாற்றங்கள்
காத்திருப்பது உண்மை தான்...

அவள் தந்து விட்டுச் செல்வது
வலியையும் வேதனையையும்
மட்டும் தான்...

இனியபாரதி.

திங்கள், 20 மே, 2019

அழுது கொண்டிருக்க...

அழுது கொண்டிருக்க மட்டுமே தெரிந்த அவளும்...
அணைத்துக் கொள்ள மட்டுமே தெரிந்த அவனும்...
என்றும் ஊடலுடன் ஒரு கூடலாய்...

இனியபாரதி.

சனி, 11 மே, 2019

அவளின் அழகைக் கண்டு...

அவளின் அழகைக் கண்டு
திகைத்து நின்ற பல வேளைகள்...
அவளுக்கும் எனக்கும்
என்ன உறவென்று
அறிந்து கொள்ள
முயலும் அந்தத் தருணங்கள்...
அவளின் மழலை 'அம்மா' மொழி
அனைத்தையும் மறக்கச் செய்து விடுகிறது...
அவளுக்காய் நான் என்றும்...
இனியபாரதி.

புதன், 1 மே, 2019

உழைப்பு...

ஊதியம் பெறத் தகுதியைத் தந்தது
என் உழைப்பு...

ஊர் சுற்ற பணத்தைப் பெற்றுத் தந்தது
என் உழைப்பு...

வறுமையின் உட்சத்தைப் போக்க வழி செய்தது
என் உழைப்பு...

பட்டினியின் கோரத் தாண்டவத்தைத் தகர்க்க உதவி செய்தது
என் உழைப்பு....

என் உழைப்பு இல்லையேல்
நான் இல்லை...

உழைப்பு இல்லா உயிரினம்
உலகில் இல்லை...

அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகளுடன்....

இனியபாரதி.