ஞாயிறு, 14 ஜூலை, 2019

கனவின் விளிம்பில்...

அவள் காண்பது கனவு என்று
உணரும் முன்னரே
அவன் மறைந்து விடுகிறான்....

கனவில் கண்டவன்
நேரில் வந்தாலும்
அடையாளம் தெரியாத அபலைப் பெண் அவள்...

அவள் அன்றிரவு சூடிய மல்லிகைக்கே
அவளின் நிலை புரியும்!!!

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

செந்தமிழின் அடுத்த கவிதை வரிகளா!!!
நிழல் தரும் நிஜம் தான் கனவு
கனவில் வருபவரை அடுத்த நாள் காணஇயலாது.
காணும் போது கூறுவது ஏங்கோ கண்டோமென்று...
மறுநாள் வாடும் மல்லிகைக்கு இந்நிலை புரியுமா.....