அவள் கண் ஜாடை
அவன் உள்ளத்தைத் தட்டி எழுப்பி
கொள்ள வைத்தது காதலை...
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அன்றன்று நடக்கும் காட்சிகள் அனைத்தும்
மனதில் பதிந்துவிட்டு
ஏதோ ஒன்று செய்துகொண்டே
இருப்பதில் தான்
என் இரகசியம் முழுவதும் உள்ளது...
இனியபாரதி.
ஏன் என்று தவித்துக் கொண்டிருந்த பொழுதுகள்
ஒன்றும் அறியா குழந்தையின் மனம் கொண்டு கழிந்தன...
எல்லாம் அறிந்த பிறகு
வஞ்சனை புகுந்து கொண்ட மனம் அலைகளிக்கின்றது...
இனியபாரதி.
செல் என்று சொல்லிவிட்டு
அடுத்த நொடி
மனம் ஏங்கும் தவிப்பைத்தான்
காதல் என்று அவன் நினைத்தான்...
அருகில் வா வா என்று அழைத்துவிட்டு
தூரத் துரத்துவது தான் காதல் என்று
அவள் உணர்த்தி விட்டாள்..
இனியபாரதி.
கொண்டாடும் சில உறவுகளும் உண்டு...
கண்டுகொள்ளாமல் இருக்கும் சில உறவுகளும் உண்டு...
உன்னைக் கொண்டாடும் உறவுக்கு
நீ உண்மையாய் இரு...
உன்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் உறவை
உதறிவிடவும் தயக்கம் கொள்ளாதே...
இனியபாரதி.
உன்னை மறந்து நான் வாழ்ந்த நேரங்கள் குறைவு...
உன் எண்ணம் இல்லாமல் நகர்ந்த
என் நிமிடங்கள் அதைவிட குறைவு...
ஒருபோதும் உன்னை மறவேன் என்று மட்டும் நினைக்காதே...
இனியபாரதி.