ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

நிலநடுக்கம்-மனநடுக்கம்

நேற்று நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தனர். தினமும் சாலை விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர். இதில் சில நாடுகளில் நடக்கும் போர்களால், அங்கிருக்கும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. 
அவர்களுக்காக இறைவனிடம் சிறப்பாய் வேண்டிக் கொள்வோம். இவற்றை எல்லாம் கேட்கும் போது, எனக்குள் எழுகின்ற கேள்வி,'என் உடல் எப்பொழுது அழியும் என்று தெரியாமல் இருக்கும் எனக்கு எதற்கு இலட்சியம்? குறிக்கோள்? ஆசை?'

இப்படி என்னும் போது எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்தது. 2000 ஆண்டில் உலகம் அழிந்துவிடும் என்ற வதந்தி வந்த போது, புதுவருடம் பிறப்பதற்கு முன், பணமுள்ளவர்கள், தங்களிடம் இருந்த அனைத்தையும் நன்கு அனுபவித்து விட்டனர். 
இது என்ன வாழ்க்கை என்றே சில நேரம் எண்ணத்தோன்றும்.

இன்று தான் நம்மிடம் நன்றாகப் பேசிவிட்டுச் சென்றிருப்பார். நாளை இறந்து விட்டார் என்ற செய்தி வரும். இன்று என் வீடு என்று இருப்போம். நாளை நிலநடுக்கத்தால் தரைமட்டமாய் போயிருக்கும். 

இன்று தான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் வேறு எதற்காய் இவ்வளவு அவசரம்? இவ்வளவு போராட்டம்? இவ்வளவு மனவருத்தம்?

உனக்கு ஒன்றைப் பிடிக்கிறதா, தயக்கமின்றி இது எனக்குப் பிடிக்கிறதென்று சொல். ஒன்று பிடிக்கவில்லையா, இது எனக்குப் பிடிக்கவில்லை என்று ஒப்புக் கொள்.

உன்னுடன் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் செய்யும் செயல் பிடிக்கலாம். ஆனால், உனக்கு ஒத்துவரவில்லையா, இல்லை என்று சொல். பின் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம்.
எல்லாவற்றிலும் ஒத்து வாழ வேண்டுமென்று அவசியமில்லை.

இருக்கும் ஒரு வாழ்க்கையை - இனிமையாக, எளிமையாக, பெற்றோர், நண்பர்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் இரசித்து வாழ வேண்டும்.

இன்றே கடைசி நாள் என்றால் எனக்கு ஒரு ஆசை.... சாக்லேட் மழையில் நனைய வேண்டும்.
உங்களுக்கு என்ன ஆசை?

கருத்துகள் இல்லை: