வியாழன், 23 ஏப்ரல், 2015

உலகப் புத்தக தினம்...

உலகப் புத்தக தினம்- சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் காலை 8 மணிக்கு வரும் 'வரலாற்றில் இன்று' நிகழ்ச்சி நன்றாக இருக்கும். விடுமுறை என்பதால் தினமும் காணத் தவறுவதில்லை. அதன் மூலம் தான் இன்று உலகப் புத்தக தினம் என்று அறிந்து கொண்டேன். இன்று ஏதாவது ஒரு புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிக்க வேண்டுமென்று முடிவெடுத்தேன்.
எனது அண்ணன் வாங்கிக் கொடுத்த 'சுடர்கள்' புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். 
ஆசிரியர், வாழ்வில் நடந்து கொள்ள வேண்டிய தத்துவங்களை அழகாக, சிறு கதைகள் மூலம் கொடுத்திருக்கிறார். அதில் என்னைக் கவர்ந்த கதை...

வெளியாட்டிலிருந்து ஒரு துறவி இந்தியா வருகிறார். ஒரு கிராமத்தில் உள்ள மக்களைச் சந்திக்கிறார். அவர்களிடம், 'நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் நான் விவசாயம்  செய்கிறேன், நான் பால் வியாபாரம் செய்கிறேன் என்று தங்கள் வேலையைச் சொல்கிறார்கள்.
ஒரு வேலைக்காரப் பெண் மட்டும், 'நான் என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்று கூறுகிறாள். அதைக் கேட்டு மகிழ்ந்த துறவி மற்றவர்களிடம், 'நீங்கள் வேலையைச் செய்து பணம் சம்பாதிக்கிறீர்கள். ஆனால், இன்னும் யாரும் உங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கவில்லை. வாழ்வதற்குத் தான் உழைப்பு. உழைப்பதற்கு வாழ்க்கை இல்லை' என்று கூறி அந்தப் பெண்ணை வாழ்த்தி விட்டுச் சென்றார்.

இதிலிருந்து நூலின் ஆசிரியர் கூற வருவது,'வாழ்வின் சுவையறிந்தால் சுமைகளும் சுகமாகும்'.

நானும் இதைத் தான் இன்று கற்றுக் கொண்டேன். வாழ்வின் ஒவ்வோரு தருணத்தையும் இரசித்து வாழ வேண்டும். என் விதி இது தான் என்று வாழ்க்கை காட்டும் பாதையில் செல்லக் கூடாது. நமக்கென்று அழகான பாதையை நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.


இதைத்தான் நாளை பிறந்த நாள்கொண்டாடப் போகும் என் தோழி கீர்த்தனாவிற்கும் கூறினேன். பிறந்த நாள் வாழ்த்துகள் கீர்த்தனா.



இன்று புத்தகம் தேடிக் கொண்டிருந்த போது என் நண்பனிடமிருந்து திருடி வந்த சில புத்தகங்களைக் காண நேர்ந்தது. சேர்ந்து படித்த புத்தகங்கள், செலவிட்ட நேரங்களை எண்ணிப் புன்னகைத்தேன்.


இத்தகைய நல்ல விசங்கள் இன்று நடக்கக் காரணம் - உலகப் புத்தக தினம்.


ஒவ்வொரு வருடமும் நினைவு கூறத்தக்கது.

நீங்களும் படித்து, பிடித்த கருத்துக்களை உங்கள் தோழர்களிடம் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை: