வெள்ளி, 24 ஏப்ரல், 2015

உண்மை உறவு...

 
உண்மை உறவு - நேற்று நான் படித்த புத்தகத்தில் இருந்து என்னைப் பாதித்த அழகான வரி...'உண்மை உறவு ஒருவர் மற்றவரிடம் எல்லாவற்றையும் பகிர்வதில் இருக்கிறது'. ஒரு இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கைச் சூழலில், உறவு என்பதற்கு அர்த்தமே தெரியாத ஒரு நிலை. இப்பொழுதெல்லாம் உறவு என்றால் அம்மா, அப்பா மட்டும் தான். தவிர்த்து, நம் உடன் பயிலும் மாணவன் அல்லது மாணவி. நம் உடன் பணியாற்றுபவர்கள் என்று மிகவே சுருக்கிக் கொண்டோம். அப்படியே சில உறவுகள் அமைந்தாலும், நாம் அவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்னென்ன? சில நேரம் யோசிப்போம்.... இதை இவர்களிடம் சொல்லி இருந்தால் மன பாரம் குறைந்திருக்குமோ என்று! சில நேரம் அவர்களிடம் நம் கஷ்டங்களை எல்லாம் சொல்லி விடுவோம். ஆனால்... அவர் நம் மனதை அதிகம் காயப்படுத்தி விடுவார். உண்மை உறவுக்கு, முதலில் உறவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நம்பிக்கைக்குரிய உறவு கிடைக்கும் பட்சத்தில்... நாம் எல்லாவற்றையும் பகிரலாம். 

இன்று நான் யோசித்த விசயம் ஒன்று மட்டும் தான். 

'நான் யாருக்காவது உண்மையான உறவாக இருந்திருக்கிறேனா?'

கருத்துகள் இல்லை: