தீபாவளித் திருநாள் கொண்டாட்ட உற்சாகத்தில் அனைவரும் இருப்போம். ஒரு வேளை உணவிற்குக் கூட கஷ்டப்படுகிறவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன் வரும் வழியில் ஜவுளிக் கடையில் கூட்டம் அலை மோதுவதைப் பார்க்கிறார். தன் இரண்டு பெண் குழந்தைகளையும் எண்ணிப் பார்க்கின்றார். அமுதா இது போல தான் டிரஸ் வேணும்-னு கேட்டாள். ஆனால், அவ்வளவு பணத்திற்கு நான் எங்கு போவேன்? நல்ல வேளை, நம் மனைவி, நம் நிலைமையைப் புரிந்து கொண்டாள் போல. அவள் வீட்டு வேலை செய்யும் இடத்தில் அவளுக்குக் கொடுத்த சேலையில் இரண்டு பிள்ளைகளுக்கும் பாவாடை,சட்டை தைத்து விட்டாள். மனதில் ஏக்கத்துடன் நகர்ந்து செல்கிறார்.
மனைவி, வீட்டருகில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டுப் பெண்கள், தங்கள் பெருமை பற்றிப் பேசிக் கொண்டும், பண்டிகை கொண்டாட்டத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.
தனக்கும்இது போல் வாழ்க்கை அமையப்போவது எப்போது என்ற ஏக்கத்துடன்மனைவி அந்த இடத்தை விட்டுநகர்கிறாள்.
கணவன்வீட்டிற்குள் நுழைந்தவுடன், பிள்ளைகள் ஓடிச் சென்று, "அப்பாஎப்போது எங்களுக்கு பட்டாசு வாங்கித் தருவீர்கள்?" என்று கேட்கின்றனர்.
நாளைக்குதான தீபாவளி, நாளைக்கு வாங்கித் தர்றேன்-னு சொல்லிட்டுவெளியில் சென்று விடுகிறார்.
கையில்ஒரு பைசா கூட இல்லை. குழந்தைகளுக்கு எப்படிபட்டாசுகள் வாங்குவது என்று யோசித்துக் கொண்டேவீதியோரம் நடந்து செல்கின்றார். சாலையைக்கடக்க முயன்ற அந்த நொடி, எதிர்பாராத விதமாக, கார் மோதி, சாலையின் மறுபக்கம் தூக்கி எறியப்படுகிறார்.
செய்திமனைவியின் காதில் விழ, அலறிஅடித்துக்கொண்டு ஓடுகிறாள். குழந்தைகள், நிலை அறியாது, அழுதுகொண்டே தாயின் பின் செல்கின்றனர்.
யாரோ ஒரு புண்ணியவான், கணவனைஅரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தான்.
அழுகையின்உச்ச நிலையில் இருந்தவள்,கணவனைக் கண்டவுடன் ஓரளவுஆறுதலடைந்தாள்.
குழந்தைகளும்தந்தையைக் கண்டவுடன், மகிழ்ச்சியில் "அப்பா" என்று அருகில் சென்று,
"அப்பாஎங்களுக்கு பட்டாசு எல்லாம் வேண்டாம். நீங்கள் சுகம் அடைந்தால் அதுவேஎங்களுக்குப் போதும்" என்று சொல்கின்றனர்.
பிள்ளைகள்பேசுவதைக் கண்ட பெற்றோர்கள் ஆனந்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.
தங்கள்வறுமையை எண்ணி சிரிப்பதா?
அழுவதா?
இப்படிவறுமையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஒருவித கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்த நிலையில் பொருள் வசதி படைத்தவர்கள்ஆடம்பரமாகப் பண்டிகைகள் கொண்டாட நினைப்பது நியாயமா?
தங்கள்பொருளில் பாதியை இது போன்றஏழைகளுடன் பகிர்ந்து கொண்டு, விழாக்களைக் கொண்டாடிப்பாருங்கள்.
விழாக்கள்அர்த்தமுள்ளதாய் அமையட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக