செவ்வாய், 26 நவம்பர், 2013

கவிதை கவிதை....

காதல் தான் கொடுமை என்று சொன்னார்கள்...
இப்பொழுது 
காதலனும் கொடுமையாக இருக்கிறான் 

சனி, 23 நவம்பர், 2013

கவலை

வகுப்பில் ஆசிரியர் ஒருவர் தத்துவவியல் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். வகுப்பு முடியும் நேரம் ஒரு தத்துவம் சொல்லி விட்டு முடிக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு டம்ளரில் தண்ணீருடன் மாணவர்கள் முன் நிற்கின்றார்.
இதை நான் சிறிது நேரம் கையில் வைத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. இதையே நான் ஒரு மணி நேரம் பிடித்துக் கொண்டிருந்தால் என் கைதான் வலிக்கும். ஒரு நாள் முழுவதும் பிடித்துக் கொண்டிருந்தால் சிரமம் எனக்குத் தான்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், 
டம்ளர் என்பது நம் மனம்.
அதில் உள்ள தண்ணீர் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள். 
பிரச்சனைகளை தூக்கிக் கொண்டே திரிந்தால் நமக்குத் தான் வலிக்கும். மனம் சோர்வடையும். நம் பிரச்சனைகளை ஒரு இடத்தில் இறக்கி வைப்போம்.
நம் கவலைகளை மகிழ்ச்சியாக மாற்ற இறைவன் இருக்கிறான் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு பொழுதையும் மகிழ்வுடன் கழிப்போம்.

வியாழன், 14 நவம்பர், 2013

கோபம்

கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். அது எல்லாம் அந்தக் காலம். இப்பொழுது எல்லாம் கோபம் வந்தால்போதும், உடனே அதை யார்மீதாவது காட்டி விட வேண்டும். அது யார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்.
செய்திதாள்களில்எல்லாம் இப்பொழுது இதுபோல் நிறைய செய்திகள்வருவதுண்டு. தந்தை மகளைக் கொன்றான், மகன் தாயைக் கொன்றான் என்றெல்லாம்நிறைய செய்திகள் சகஜமாகி விட்டன.
கோபம் எதனால் வருகிறது என்றுஇன்று காலை ஒரு இரண்டுமணி நேரம் யோசித்திருப்பேன். என்கோபத்திற்குப் பதில் கிடைத்தது.
முதலில்நான் கோபப் பட ஆரம்பிப்பதுயாரால்? அநேகமாக நாம் அதிகம்நேசிப்பவர் நமக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்யும் பொழுதுநமக்குக் கோபம் வருகிறது. நாம்விரும்பும் பொருள் நமக்குக் கிடைக்காமல்நமக்கு அடுத்திருப்பவருக்குக் கிடைக்கும் தருணங்களில் கோபம் வருகின்றது.
ஒருவர்நம்மைப் புகழாமல் நம் எதிரியைப் புகழும்பொழுது, நாம் நினைக்கும் செயல்நடக்காத பொழுது, பணம் கையில்இல்லாத பொழுது என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
கோபப்படுவதால்பயன் என்ன என்று யோசித்தால்ஒன்றும் இல்லாமல் தான் இருக்கும். கோபத்தால்ஒரு பயனும் கிடையாது. நம்முடையசக்தி தான் வீணாகின்றது. தேவைஇல்லாத மன அழுத்தம், உடல்சோர்வு, விலை மதிப்பில்லா கண்ணீருக்குமதிப்பில்லாமல் போகின்றது.
என் அழகு கூட நான்கோபப் படுவதால் தான் குறைகிறது என்றுமருத்துவர்கள் கூறுகிறார்கள். கோபப்படுவதால் அழகு குறையும் என்பதுமறுக்க முடியாத அறிவியல் உண்மை.
சரி அது இருக்கட்டும். இனிஎன்னால் கோபத்தைக் குறைக்க முடியுமா?
முடியும்என்றால் முடியும்.
முடியாதுஎன்றால் முடியாது.
நான் இன்று முடிவெடுத்தேன், கோபத்தைக்குறைத்துக் கொள்ள வேண்டும் என்று.
இறைவா,நீரே எனக்குத் துணையாய்இருந்து என் கோபத்தைக் கட்டுப்படுத்தஉதவி செய்யும்.

நீங்கள்எப்பொழுது கோபத்தைக் குறைக்கப் போகிறீர்கள்?

புதன், 6 நவம்பர், 2013

Captured by me...

இறைவனின் படைப்பை ரசிக்க ஒரு யுகம் வேண்டும்...
அந்த யுகத்தில் 
நான் ரசித்த 
ஒரு அதிசயம் 
இந்த நத்தை....



இலையில் நீர்த்திவலைகள் உல்லாசமாய் அமர்ந்து கொண்டு 

யாரைப் பற்றி பேசுகின்றன?






எனக்கு எல்லாமுமாய் இருக்கும் என் இனிக்குட்டிக்கு சமர்ப்பணம்.


செவ்வாய், 5 நவம்பர், 2013

பண்டிகை அவசியமா?

தீபாவளித் திருநாள் கொண்டாட்ட உற்சாகத்தில் அனைவரும் இருப்போம். ஒரு வேளை உணவிற்குக் கூட கஷ்டப்படுகிறவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன் வரும் வழியில் ஜவுளிக் கடையில் கூட்டம் அலை மோதுவதைப் பார்க்கிறார். தன் இரண்டு பெண் குழந்தைகளையும் எண்ணிப் பார்க்கின்றார்.  அமுதா இது போல தான் டிரஸ் வேணும்-னு கேட்டாள். ஆனால், அவ்வளவு பணத்திற்கு நான் எங்கு போவேன்?  நல்ல வேளை, நம் மனைவி, நம் நிலைமையைப் புரிந்து கொண்டாள் போல. அவள் வீட்டு வேலை செய்யும் இடத்தில் அவளுக்குக் கொடுத்த சேலையில் இரண்டு பிள்ளைகளுக்கும் பாவாடை,சட்டை தைத்து விட்டாள். மனதில் ஏக்கத்துடன் நகர்ந்து செல்கிறார்.


மனைவி, வீட்டருகில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டுப் பெண்கள், தங்கள் பெருமை பற்றிப் பேசிக் கொண்டும், பண்டிகை கொண்டாட்டத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.
தனக்கும்இது போல் வாழ்க்கை அமையப்போவது எப்போது என்ற ஏக்கத்துடன்மனைவி அந்த இடத்தை விட்டுநகர்கிறாள்.
கணவன்வீட்டிற்குள் நுழைந்தவுடன், பிள்ளைகள் ஓடிச் சென்று, "அப்பாஎப்போது எங்களுக்கு பட்டாசு வாங்கித் தருவீர்கள்?" என்று கேட்கின்றனர்.
நாளைக்குதான தீபாவளி, நாளைக்கு வாங்கித் தர்றேன்-னு சொல்லிட்டுவெளியில் சென்று விடுகிறார்.
கையில்ஒரு பைசா கூட  இல்லை. குழந்தைகளுக்கு எப்படிபட்டாசுகள் வாங்குவது என்று யோசித்துக் கொண்டேவீதியோரம் நடந்து செல்கின்றார். சாலையைக்கடக்க முயன்ற அந்த நொடி, எதிர்பாராத விதமாக, கார் மோதி, சாலையின் மறுபக்கம் தூக்கி எறியப்படுகிறார்.
செய்திமனைவியின் காதில் விழ, அலறிஅடித்துக்கொண்டு ஓடுகிறாள். குழந்தைகள், நிலை அறியாது, அழுதுகொண்டே தாயின் பின் செல்கின்றனர்.
யாரோ ஒரு புண்ணியவான், கணவனைஅரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தான்.
அழுகையின்உச்ச நிலையில் இருந்தவள்,கணவனைக் கண்டவுடன் ஓரளவுஆறுதலடைந்தாள்.
குழந்தைகளும்தந்தையைக் கண்டவுடன், மகிழ்ச்சியில் "அப்பா" என்று அருகில் சென்று,
"அப்பாஎங்களுக்கு பட்டாசு எல்லாம் வேண்டாம். நீங்கள் சுகம் அடைந்தால் அதுவேஎங்களுக்குப் போதும்" என்று சொல்கின்றனர்.
பிள்ளைகள்பேசுவதைக் கண்ட பெற்றோர்கள் ஆனந்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.
தங்கள்வறுமையை எண்ணி சிரிப்பதா?
அழுவதா?
இப்படிவறுமையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஒருவித கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலையில் பொருள் வசதி படைத்தவர்கள்ஆடம்பரமாகப் பண்டிகைகள் கொண்டாட நினைப்பது நியாயமா?

தங்கள்பொருளில் பாதியை இது போன்றஏழைகளுடன் பகிர்ந்து கொண்டு, விழாக்களைக் கொண்டாடிப்பாருங்கள்.

விழாக்கள்அர்த்தமுள்ளதாய் அமையட்டும்.