நாம் அன்பு செய்யும் ஒவ்வொருவரிடமும் நாம் எதிர் பார்ப்பது, நம்மையும் அவர்கள் அன்பு செய்ய வேண்டும் என்று..... ஆனால், "அன்பு செய்ய வேண்டும்" என்ற வார்த்தைக்கு நம்மில் பலருக்கு அர்த்தம் தெரிவதில்லை. நான், அன்பு செய்பவராக நினைப்பவருக்கு, எவ்வாறெல்லாம் என் அன்பை வெளிப்படுத்துகிறேன்? நான் அவரை அன்பு செய்கிறேன் என்று என்னால் எப்படி சொல்ல முடிகிறது? அன்பு எப்படி உணர்த்தப்படுகிறது? அந்த அன்பு அவரால் உணரப்படுகிறதா? அன்பின் வடிவம் தான் என்ன? இப்படி நிறைய வினாக்கள் எழுப்பிக்கொண்டே போகலாம்.
"அன்பு" - முதலில் நம்மில் உணரப்பட வேண்டும். அன்பு என்பது எவ்வாறு இருக்கும் என்பது நமக்குத் தெரிந்தால் தான், அந்த அன்பை பிறரோடு பகிரும் பொழுது, அதன் சுவையை உணர முடியும். நமக்குள் உணரப்படும் அன்பு, பிறரிடம் பகிரப்படும் பொழுது இனிமையானதாக மாறும்.
அன்பை எப்படி உணர்வது? நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமாக உணரலாம். உதாரணமாக, தினமும் நாம், நம்மை அலங்காரம் செய்து கொள்கிறோம். சீப்பை எடுத்து சீவும் பொழுது, இந்த ஹேர் ஸ்டைல் நமக்கு நல்லா இருக்குமா என்று பார்த்து பார்த்து சீவுகிறோம். அருகில் இருப்பவர் எப்படி சீவி இருந்தாலும் நமக்கு கவலை இல்லை.. ஏன் என்றால் அது நான் இல்லை. இது தான் ரியாலிட்டி .... இது போல் பல விஷயங்கள்...
ஏன் என்றால், என்னை நான் அன்பு செய்கிறேன். நான் நன்றாக இருக்க வேண்டும். இந்த நொடி அன்பு என்னுள் உணரப்படுகிறது. இப்படி சின்ன சின்ன விஷயங்கள் தான் அடித்தளமாக அமைகின்றன.
இப்படி நம்முள் உணரப்படும் அன்பு, பிறரிடம் பகிரப்படும் பொழுது, நான் அன்பு செய்பவர் இப்படி இருக்க வேண்டும்!!! அப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அப்படி இல்லாத பட்சத்தில் நமக்குள் குழப்பம், சண்டை சச்சரவு, என்று கோபத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆகவே, நம்முள் உணரப்படும் அன்பையும், உணர்த்தப்படும் அன்பையும் இனிமையானதாக ஆக்க முயற்சி செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக