சனி, 20 ஜூலை, 2013

காதல் கடிதம் தீட்டவே...

அது என்ன  காதல் கடிதம்? காதல் கடிதம் என்றால் எப்படி இருக்கும் என்று வருங்கால சந்ததிகள் கேட்டால் கூட ஆச்சரியபடுவதற்கு இல்லை. காதல் கடிதம்... நினைக்கும் போதே மனம் அலை பாய்கிறது. தன் காதலனுக்கோ, காதலிக்கோ கடிதம் எழுத வேண்டும். எடுத்தவுடன் வார்த்தைகள் வந்து விடாது... பெரும்பாலும் கடிதம் தொடங்குவது கண்ணே... மணியே... அன்பே... என்று தான்.
பெண்களுக்கு பிடித்த விஷயங்களுள் ஒன்று, தன் காதலன் தன்னைப் பற்றி புகழ வேண்டும், தன் அழகை ரசிக்க வேண்டும் என்று......... அது எழுத்து வடிவில் கிடைக்கும் பொழுது மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கும் ஆனந்தம்....
ஆனால், பெரும்பாலும் அது நடப்பதில்லை.. எழுத சோம்பேறித்தனப்பட்டு தான் greeting card என்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் போல.... ஆனால், அது கடிதம் எழுதும் அளவிற்கு சந்தோசத்தை தருவதில்லை... 
காதலை கடிதத்தின் மூலம் பகிர்ந்து கொள்வோம்... அன்பு பெருகட்டும்.......

கருத்துகள் இல்லை: