கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
வியாழன், 25 ஜூலை, 2013
புதன், 24 ஜூலை, 2013
கருமை
துக்கத்தின் அடையாளமாக இருக்கும் கருமை நிறம், தன்னுள் பல நல்ல குணங்களைக் கொண்டுள்ளது. கருப்பு எனக்கு வெறுப்பு... எனக்கு பிடிக்காது என்று பல காரணங்கள் சொல்லலாம். கருமை நிறம் நம் வாழ்வோடு ஒன்றி விட்ட ஒரு நிறம்.
பிறந்த குழந்தை, முதன்முதலாக தன் அன்னையைப் பார்க்கும் அந்தக் கண்ணின் கருவிழி கருமை நிறம் தான். பெண்களின் மேனிக்கு அழகூட்டும் வைரம் மண்ணில் இருந்து கிடைக்கும் போது கருமை நிறம் தான்.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் விவசாயி கருமை நிறம் தான். பொதுவாக ஆடைகளில் விரும்பி அணியப்படும் நிறம் கருமை தான்.
பெண்களின் கூந்தல் நிறம் கூட கருமை தான். இயல்பாக கருமை நிறம் பிடித்தவர்களிடம் மன உறுதி, பலம், நேர்மறையான குணங்கள், புத்திக்கூர்மை இருப்பதைக் காணலாம்.
கருமை கண்ணுக்கு குளுமை... கருமை நிறத்தின் பெருமையை உணர்வோம்.
திங்கள், 22 ஜூலை, 2013
வாழ்வில் இனிமை வழங்கும் கனியே...
நம் வாழ்வில், நாம் இனிமை என்று நினைப்பது, சந்தோஷமான தருணங்களை , நமக்கு பிடித்தவருடன் இருக்கும் நேரங்களை, நம் விருப்பம் நிறைவேறும் சமயங்களை, வெற்றி பெறும் நேரங்களை மட்டுமே...
ஆனால், நம் வாழ்வை இனிமையாக்குவது, நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தான்.மரத்தில் இருக்கும் காயானது, கனியாகும் பொழுது தான் நம்மால் சுவைக்க முடிகிறது. வாழ்வில் வரும் ஏமாற்றங்களையும், தோல்விகளையும் ஏற்றுக்கொண்டு வாழும் பொழுது தான் வாழ்வென்ற கனியை நம்மால் சுவைக்க முடியும்.
சனி, 20 ஜூலை, 2013
காதல் கடிதம் தீட்டவே...
அது என்ன காதல் கடிதம்? காதல் கடிதம் என்றால் எப்படி இருக்கும் என்று வருங்கால சந்ததிகள் கேட்டால் கூட ஆச்சரியபடுவதற்கு இல்லை. காதல் கடிதம்... நினைக்கும் போதே மனம் அலை பாய்கிறது. தன் காதலனுக்கோ, காதலிக்கோ கடிதம் எழுத வேண்டும். எடுத்தவுடன் வார்த்தைகள் வந்து விடாது... பெரும்பாலும் கடிதம் தொடங்குவது கண்ணே... மணியே... அன்பே... என்று தான்.
பெண்களுக்கு பிடித்த விஷயங்களுள் ஒன்று, தன் காதலன் தன்னைப் பற்றி புகழ வேண்டும், தன் அழகை ரசிக்க வேண்டும் என்று......... அது எழுத்து வடிவில் கிடைக்கும் பொழுது மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கும் ஆனந்தம்....
ஆனால், பெரும்பாலும் அது நடப்பதில்லை.. எழுத சோம்பேறித்தனப்பட்டு தான் greeting card என்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் போல.... ஆனால், அது கடிதம் எழுதும் அளவிற்கு சந்தோசத்தை தருவதில்லை...
காதலை கடிதத்தின் மூலம் பகிர்ந்து கொள்வோம்... அன்பு பெருகட்டும்.......அன்பை அன்பு செய்...
நாம் அன்பு செய்யும் ஒவ்வொருவரிடமும் நாம் எதிர் பார்ப்பது, நம்மையும் அவர்கள் அன்பு செய்ய வேண்டும் என்று..... ஆனால், "அன்பு செய்ய வேண்டும்" என்ற வார்த்தைக்கு நம்மில் பலருக்கு அர்த்தம் தெரிவதில்லை. நான், அன்பு செய்பவராக நினைப்பவருக்கு, எவ்வாறெல்லாம் என் அன்பை வெளிப்படுத்துகிறேன்? நான் அவரை அன்பு செய்கிறேன் என்று என்னால் எப்படி சொல்ல முடிகிறது? அன்பு எப்படி உணர்த்தப்படுகிறது? அந்த அன்பு அவரால் உணரப்படுகிறதா? அன்பின் வடிவம் தான் என்ன? இப்படி நிறைய வினாக்கள் எழுப்பிக்கொண்டே போகலாம்.
"அன்பு" - முதலில் நம்மில் உணரப்பட வேண்டும். அன்பு என்பது எவ்வாறு இருக்கும் என்பது நமக்குத் தெரிந்தால் தான், அந்த அன்பை பிறரோடு பகிரும் பொழுது, அதன் சுவையை உணர முடியும். நமக்குள் உணரப்படும் அன்பு, பிறரிடம் பகிரப்படும் பொழுது இனிமையானதாக மாறும்.
அன்பை எப்படி உணர்வது? நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமாக உணரலாம். உதாரணமாக, தினமும் நாம், நம்மை அலங்காரம் செய்து கொள்கிறோம். சீப்பை எடுத்து சீவும் பொழுது, இந்த ஹேர் ஸ்டைல் நமக்கு நல்லா இருக்குமா என்று பார்த்து பார்த்து சீவுகிறோம். அருகில் இருப்பவர் எப்படி சீவி இருந்தாலும் நமக்கு கவலை இல்லை.. ஏன் என்றால் அது நான் இல்லை. இது தான் ரியாலிட்டி .... இது போல் பல விஷயங்கள்...
ஏன் என்றால், என்னை நான் அன்பு செய்கிறேன். நான் நன்றாக இருக்க வேண்டும். இந்த நொடி அன்பு என்னுள் உணரப்படுகிறது. இப்படி சின்ன சின்ன விஷயங்கள் தான் அடித்தளமாக அமைகின்றன.
இப்படி நம்முள் உணரப்படும் அன்பு, பிறரிடம் பகிரப்படும் பொழுது, நான் அன்பு செய்பவர் இப்படி இருக்க வேண்டும்!!! அப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அப்படி இல்லாத பட்சத்தில் நமக்குள் குழப்பம், சண்டை சச்சரவு, என்று கோபத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆகவே, நம்முள் உணரப்படும் அன்பையும், உணர்த்தப்படும் அன்பையும் இனிமையானதாக ஆக்க முயற்சி செய்வோம்.
செவ்வாய், 9 ஜூலை, 2013
சமரசம்
சமரசம் ஆங்கிலத்தில் Compromise எனப்படும். நாம் எவற்றுடன், யாருடன் சமரசம் செய்து கொள்ள நினைக்கிறோம்? இல்லை,நம்மை நாமே சமரசம் செய்து கொள்கிறோமா?
ஒரு செயலைச் செய்ய நினைக்கிறோம். ஆனால், அதை முடிக்க முடியவில்லை, அப்பொழுது, நமக்கு நாமே சமரசம் செய்து கொள்கிறோம். ஒருவருக்கு, ஒரு செயலை செய்து தருவதாக வாக்களிக்கிறோம். அவற்றை செய்ய முடியவில்லை என்றாலும், அவருடன் சமரசம் செய்ய விழைகிறோம். இவ்வாறு, சமரசம் மனித வாழ்க்கையோடு ஒன்றி விட்ட ஒன்றாக மாறி விட்டது. நாம் சமரசம் செய்வதனால், நமக்கும் நமக்கு அடுத்திருப்பவருக்கும் நன்மை உண்டாகுகிறதா?
சமரசம் நம் வாழ்வை ஆக்குவதற்காக இருக்கும் பட்சத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், எதிர்மறை எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் சமரசம் செய்வது வாழ்வை சீரழித்து விடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)