நம் செந்தமிழ் நாட்டில், வெகு சிலருக்குத் தான் இந்த வார்த்தை பிடிக்காமல் இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவர்களுக்கு இது ஒரு பரீட்சையப்பட்ட வார்த்தை. 'இலவசம்'... நான் சிறு வயதாய் இருந்த போது, என் மம்மி யாரும் இலவசமாக எது கொடுத்தாலும் வாங்கக் கூடாது எனக்கு வேண்டாம் என்று சொல்லிப் பழக வேண்டும் என்று தான் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று பேரம் பேசுவதில் தொடங்கி, எது இலவசமாய் கிடைக்கிறதோ அனைத்தையும் வாங்கிக் கொள், என்று தான் இன்றைய அம்மாக்கள் சொல்லி அனுப்புவார்கள் போல.
இலவசம் என்றால் எது கிடைத்தாலும் பரவாயில்லை. கிடைப்பதை பெற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு எண்ணம். ஏனென்றால்.. அதை என் வியர்வை சிந்தி சம்பாதிக்கவில்லையே!!! அல்லது... என் பெற்றோர் எனக்கு ஆசையாய் வாங்கிக் கொடுத்தது கூட இல்லையே... யாரோ ஒருவர் எதற்காகவோ கொடுக்கிறார். என் அம்மா அடிக்கடி சொல்லுவார்.... நமக்கு யாராவது இலவசமாய் ஏதாவது செய்கிறார் என்றால்.. நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத் தான் செய்வார் என்று.
அதுவும் அல்லாமல்.. இலவசம் நிலைத்தாலும் பரவாயில்லை... இல்லை அழிந்துவிட்டாலும் பரவாயில்லை. நாம் வருந்துவது இல்லை.
வாரஇதழ்களில் புதிர் வினா விடை தொடங்கி, வெளிநாடு செல்ல ஒரு வாய்ப்பு என நமக்கு வரும் குறுஞ்செய்திகளுக்குப் பதில் அனுப்புவது வரை... எல்லாமே இலவசத்திற்காய்த் தான் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு முறை, அம்மா தொலைக்காட்சியைப் பார்க்கும் போது இந்த இலவசம் என்ற வார்த்தை தான் என் மனதை நெருடிக் கொண்டிருக்கும்.
கொடுப்பவருக்குத் தான் அறிவில்லையைன்றால்... வாங்குபவரும் அடகு வைத்துவிட்டாரா? என்று தான் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
இலவசமாய் பொருள் கொடுப்பதையோ.. இலவசமாய் பெற்றுக் கொள்வதற்கோ ஆசைப்படும் நாம் இலவசமாய் நம்மிடம் கொடுக்க இருப்பதை யாருக்கும் கொடுக்க மாட்டோம்.
நம் நேரம்...
நம் அன்பு...
நம் அரவணைப்பு...
நம் பாசம்...
நம் கரிசனை...
நம் நட்பு...
நம் நல்ல சொற்கள்..
நம் வாழ்த்துகள்...
இப்படிக் கொடுப்பதற்கு இலவசமாய்ப் பல நல்ல காரியங்கள் இருக்கும் போது... அற்ப இலவசப் பொருட்களுக்கு ஏங்காதீர்கள்!!!! மற்றவர்களையும் ஏங்க வைக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக