இன்றைய என் தலைப்பு வேடிக்கையாக இருந்தாலும்...இதில் சிந்திக்க, நிறைய காரியங்கள் உள்ளன. சண்டை என்றால் இரு நாடுகளுக்கு இடையே நடப்பது, இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடப்பது, இரு மதவாதிகளுக்கு இடையே நடப்பது மட்டுமல்ல... கணவன் மனைவிக்கு இடையே நடப்பது, காதலன் காதலிக்கு இடையே நடப்பது, நண்பர்களுக்கு இடையே நடப்பது,பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நடப்பது, தெருக்களில் நடப்பது.... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
சண்டை போடுவதால் பயன் உண்டா? என்ற ஒரு கேள்வி எழுப்பினால் நம்மில் சிலர்.... சண்டையிடுவதால் தான் என் கணவர் நான் சொல்லும் வேலைகளைச் செய்கிறார் என்று மனைவி சொல்வார்கள்!
சண்டை இல்லாவிட்டால் காதலில் சுவாரசியம் இருக்காது என்று காதலர்கள் சொல்வார்கள்!
சண்டையிடும் போது தான் உண்மையான நண்பனைப் புரிந்து கொள்ள முடியும் என்று கூட நண்பர்கள் கூறுவார்கள்.
பக்கத்து வீட்டுக்காரருடன் ஏதாவது சண்டையிட்டால் தான், அவன் என்னிடம் எதுவும் கேட்டுவர மாட்டான் என்பதற்காகக் கூட சிலர் சண்டையிடுவார்கள்.
இப்படி சண்டையிடுவதற்குப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
நான் அடிக்கடி காணும் சண்டை...
குடித்துவிட்டு நடுரோட்டில், தன் மனைவியைத் தகாத வார்த்தைகளில் பேசும் கணவன்...
பணத்திற்காகத் தன் கணவனுடன் சண்டையிடும் மனைவி...
பெருமை தேடிக் கொள்ள வேண்டுமென்பதற்காகத் தன் நண்பர்களைப் பகைத்துக் கொள்கிறவர்கள்..
செல்வத்தைத் தேடிக் கண்டடைய ஒரு சண்டை...
இன்னும் சிலர்...
யாராவது சந்தோஷமாக இருந்துவிட்டால் போதும்..
அவர்கள் அமைதியைக் கெடுப்பதற்காகவே சண்டையிடுவார்கள்.
'சண்டை' – "sun” + “die” – காலையில் சண்டை போட்டிருந்தால், அந்த நாள் இரவு முடிவதற்குள் உன் சண்டையைத் தீர்த்து, சமரசம் செய்து கொள். நேற்று, சில நாடுகளில் நிலநடுக்கம் என்று செய்தியில் வாசித்தேன். மாலை, பள்ளி முடிந்து வரும் போது, திடீரென இந்த வரிகள் மட்டும் என் ஞாபகத்திற்கு வந்தது.... 'பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்னு போகும் ஆட்டமே'.
இதற்கும் இன்றைய தலைப்பிற்கும் சம்பந்தம் இருக்கிறது. சண்டையிடுவதால் பலன் என்றால் தவறில்லை. ஆனால்... அதையும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்காதே. உன் உறவை முறித்துக் கொள்வதற்கும் பின் தயங்க மாட்டார்கள்.
உன் உற்றவர்களிடம் சண்டை போடு. ஆனால் சமரசம் செய்து கொள், அடுத்த நாள் விடிவதற்குள்...
சண்டையால் உடல் நலனையும் உள்ள சுகத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்!!!!
அறிவுரை அல்ல... கட்டளை.
'பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்னு போகும் ஆட்டமே'.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக