
சிலருக்கு குழந்தைப் பருவமாக இருந்திருக்கலாம்.
சிலருக்கு இளமைப் பருவமாக இருந்திருக்கலாம்.
சிலருக்கு முதுமைப் பருவமாகக் கூட இருந்திருக்கலாம்.
ஆனால், அனைவரும் கண்ணீரை ருசி பார்த்திருப்போம் தான்.
இந்தக் கண்ணீரில் அவ்வளவு பெரிய வல்லமை என்ன? பெண்கள் அழுதே சாதிப்பவர்கள் என்ற பழமொழி கூட உண்டு. அதன் அர்த்தம் சிறு வயதில் எனக்குப் புரியவில்லை. ஆனால் இன்று என் வாழ்வில் நானே செய்யும் போது
அதை என்னால் உணர முடிகிறது.
கண்ணீர் - சில நேரங்களில் ஆறுதலாகவும்.. சில நேரங்களில் ஆற்றுப்படுத்துவதாகவும்... சில நேரங்களில் மற்றவரை மகிழ்விப்பதாகவும்.. இன்னும் சில நேரங்களில் மற்றவரையும் அழ வைப்பதாகவும் இருக்கிறது. இந்தக் கண்ணீருக்கு இவ்வளவு வல்லமையா என்று ஆச்சரியப்பட்டுத் தான் இன்று இந்தத் தலைப்பைப் பற்றி எழுத முற்பட்டேன்.
கண்ணீர் - அன்பானவரை மயக்கவும் உதவும்
கண்ணீர் - கடவுளின் உள்ளத்தையும் கரைக்கும்
கண்ணீர் - பரிதாபத்தையும் ஏற்படுத்தும்
கண்ணீர் - ஆசையைக் கூடத் தட்டி எழுப்பும்
ஆனால்.. அனைத்தும் நாம் அழுகின்ற சூழலைச் சார்ந்தது.
அழுவது தவறல்ல. ஆனால்.. தேவையில்லாததற்காக தேவையில்லாதவர்களுக்காக அழுவது தான் தவறு. எனக்கு அழுவதென்றாலே பிடிக்காது. யாராவது அழுதால்... அவரைத் திட்டத் தான் செய்வேன். ஆனால்.. அதிகம் அழுபவர் பட்டியலில் முதல் வரிசையில் நான் இருப்பேன்.
யார் முன்பு அழுதும்.. நாம் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை என்பதை சற்றுத் தாமதமாகத் தான் என் வாழ்வில் புரிந்துகொண்டேன்.
'நமக்குள் நாமே அழுது கொள்வது' என்பது தான் இன்றைய காலக்கட்டத்தில் நாம் தள்ளப்பட்டிருக்கிற நிலைமை.
உன் கண்ணீரைச் சிந்துவதற்கு முன்..யாருக்காக? எதற்காக? என்று யோசித்துவிட்டுச் சிந்து.
உன் கண்களில் இருந்து வரும் ஒவ்வொரு துளிக்கும் ஒரு மதிப்பு உண்டு.