கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
காய்ந்து
மாய்ந்து விட்டாளோ
என்று எண்ணிக் கொண்டு
அவள் அருகில் செல்லாமல் இருந்த
சில நாட்களில்
அவள் துளிர்விட்டு எழும்
அழகுதான் என்னே!!!
இனியபாரதி.
என் ஈரத்துளிகள்
அவள் இதழ் நனைக்கும் நேரம்
நோகாமல் நனையும்
அவள் இதழ் மட்டும்
என்றும்
எனக்குச் சொந்தமாக வேண்டும்!!!!