புதன், 1 ஜூன், 2022

அளப்பரியது!!!

 ஓடிக் கொண்டிருக்கும் 

இந்த வாழ்க்கையில் 

அன்பை மட்டுமே

மற்றவருடன் பகிரும்போது

கிடைக்கும் இன்பம்

அளப்பரியது. 


இனியபாரதி. 


செவ்வாய், 24 மே, 2022

காதல் கொள்ள....

 அவளிடம் இருந்த ஒன்று மட்டுமே

அவளைக் காதல் செய்ய வைத்தது...

"பேரன்பு"


இனியபாரதி. 














ஞாயிறு, 6 மார்ச், 2022

அவள் அழகுதான் என்னே!!!

 காய்ந்து

மாய்ந்து விட்டாளோ

என்று எண்ணிக் கொண்டு

அவள் அருகில் செல்லாமல் இருந்த

சில நாட்களில்

அவள் துளிர்விட்டு எழும் 

அழகுதான் என்னே!!!


இனியபாரதி.

எனக்குச் சொந்தமாக....

 என் ஈரத்துளிகள்

அவள் இதழ் நனைக்கும் நேரம்

நோகாமல் நனையும்

அவள் இதழ் மட்டும்

என்றும்

எனக்குச் சொந்தமாக வேண்டும்!!!!


இனியபாரதி. 

சனி, 1 ஜனவரி, 2022

எல்லாம் நன்மைக்கே....

நமக்கு நடக்கும் அனைத்தும்

ஏதோ சதி என்று

தோன்றினாலும்

இறைவன் அருளாமல்

எதுவும் இங்கில்லை

என்பதை மட்டும்

மனதில் கொண்டு

நகர்ந்து செல்வோம்

மன அமைதியுடன்...

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்...

இனியபாரதி.