செவ்வாய், 31 டிசம்பர், 2019

முடிவே ஆரம்பம்...

பல நேரங்களில் வேதனைகள்
கஷ்டங்கள்
கனவுக் கலைப்புகள்
இப்படிப் பல காயங்கள்....

மனதில் ஆறாமல் வடுவாய் இருக்கும்
பலரின் மனங்களில்...

ஆனாலும்
அடுத்த நொடியோ... நிமிடமோ...
நமக்காகக் காத்திருப்பது இல்லை...

நாமும் அதைக் கடந்து செல்கிறோம்.

இப்படி வருவது தான் ஒவ்வொரு ஆண்டு புது வருடமும்...

நம் கனவு... இலட்சியம்... வாழ்க்கை... என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை நோக்கி...

ஓடுவோம்...
ஓடுவோம்...

வாழ்க்கை முடியும் வரை...

அடுத்த வருடம் ஒவ்வொரு இல்லத்திலும் புது விடியலைக் கொண்டு வரட்டும்...

இனியபாரதி. 

1 கருத்து:

Ggg சொன்னது…

ஆண்டின் இறுதியில் புதியதொரு உதயம் நீங்கள் கவிதை எழுத தொடங்கியது
2020 பற்பல வெற்றிகளை அள்ளி தரும் ஆண்டாக அமைய எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெனித்தா மேரி