அன்புள்ள தோழிக்கு....
இன்று உன் பிறந்த நாள்...
பிறந்த நாள் வாழ்த்துகள் என்று ஒரு வரியில் கூறிவிட
மனம் வரவில்லை...
மனம் வரவில்லை...
உனக்காக ஒருசில வரிகள்....
பொறுமைக்கு இலக்கணமாய்...
கருணையில் கருவாய்....
புன்முறுவலின் பூங்கொத்தாய்....
தலையசைக்கும் தலையாட்டி பொம்மையாய்...
தோள் கொடுக்கும் தோழியாய்...
கரடுமுரடான பாதையில் வழிகாட்டியாய்...
பாசத்தைப் பொழியும் அன்பு மகளாய்...
அரவணைக்கும் அன்னையாய்...
பகிர்ந்து கொள்ளும் பண்புடையவாய்...
என்று
எப்படி உன்னால் மட்டும் இத்தனை
குணங்களையும்
ஒருங்கே கொண்டிருக்க முடிகிறது?
உன்னைப் பார்த்துப்
பொறாமைப்படுகிறேன்...
பொறாமைப்படுகிறேன்...
உன் பொறுமை குணம்
எனக்கும்
வேண்டுமென்று...
எனக்கும்
வேண்டுமென்று...
கவிமா....
நீ ஒரு கவிதை.....
என் கவித்தலைவன் பாரதியின் பட்டப்பெயரையே பெயராகச் சூட்டிக் கொண்ட நீ.....
என் பாரதியைப் போன்று....
அவன் புகழைப் போன்று....
பல்லாண்டு...
எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ....
எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ....
உன் அன்புத் தோழியின்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக