செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இதை மட்டுமாவது செய்வேன்...

நான் உன்னை அன்பு செய்கிறேன்... என்று
நூற்றுக்கு முந்நூறு முறை கூறுவது மட்டும்
அன்பல்ல...

ஒருவர் மீது நமக்குள்ள அன்பைக் காட்ட
பல வழிகள் உள்ளன..

இப்படி ஏதாவது ஒரு விதத்தில் நமதன்பை
மற்றவர்க்கு உணர்த்தலாம்...

அன்பு செய்வதாக மட்டும் ஒருவரை ஏமாற்றுவது

உலகிலுள்ள பாவங்களில்
மிகக் கொடுமையானது!!!

உனக்குப் பிடித்தால் பிடிக்கிறதென்று தைரியமாகச் சொல்!

உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதையும் தைரியமாகச் சொல்லிப்பார்!!

கண்டிப்பாக நீ ஏற்றுக் கொள்ளப்படுவாய்!!!

அன்பைத் தானமாகப் பெறாதீர்!
அன்பைத் தானமாகத் தராதீர்!

அன்புடன் இனியா.

கருத்துகள் இல்லை: