இன்று செல்லம்மாவின் கணவர், பாரதியின் இறந்த நாள்.. அதாவது, நமது நாட்டுப் பெண்களைப் பற்றிப் புரட்சிப்பாட்டு பாடிய அதே மகாகவி பாரதியின் இறந்த நாள்.. பாரதியை எந்த அளவு நான் போற்றுகிறேனோ, அதே அளவிற்குச் செல்லம்மாவையும் எப்போதும் நினைத்துப் பார்ப்பேன்... என் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்தவள் இந்தச் செல்லம்மா...
கணவனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதவளாக... தன் கணவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்தவளாக... அன்பானவளாக... இப்படி எந்தக் கோணங்களில் பார்த்தாலும் செல்லம்மா ஒரு அழகி.
நம் நண்பர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாலே அந்தச் சோகத்தை மறக்க மாதங்கள் ஆகின்றன... தன் கணவன் இறந்துவிட்ட சோகத்தை அவள் எப்படித் தாங்கியிருந்திருப்பாள்? அதுவும் உதவுவதற்கு ஆட்களே இல்லை... பாரதி படம் பார்த்த அந்த நாள்... என்னுள் எழுந்த எண்ணம்.. 'பாரதிக்கு வந்த இந்த நிலை, என் எதிரிக்குக் கூட வரக்கூடாதென்று!...' இன்னும் பாரதியின் அந்த இறப்புக் காட்சி என் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது...
இந்தக் காலத்தில் பணக்காரப்பையன்களை மட்டுமே பார்த்து காதலித்துக் கரம்பிடிக்கிறார்கள் பெண்கள்.. செல்லம்மா, அறியாத வயதில், கணவன் என்ற பெயரில், பாரதியை மணந்து கடைசி வரை அவருக்காகவே அவருடன் வாழ்ந்தவள்.. இன்றைய தினம் செல்லம்மாவையும் சிறப்பாக எண்ணிப் பார்க்கிறேன்..
என் பாரதியின் செல்லம்மா... போற்றுதற்குரியவள்...
என் பாரதி... என்றும் நினைவில் நிற்பவர்....