செவ்வாய், 10 ஜனவரி, 2023

கனவைக் களையாதே!!!

 உன் உருவைக் கண்டு வருந்தாதே!

அந்த உருவைக் கொண்டு

உருவாக்க முடிந்தவை எவை என்று யோசி!

உன் வெகுளி உள்ளம் கண்டு வெதும்பாதே!

அந்த உள்ளத்தின் ஆழத்திலும் ஒளிந்திருக்கும்

அன்பை அடுத்தவருடன் பகிர்ந்துகொள்!

கனவை அடையும்முன் மலைத்துக்போகாதே!

அதை அடையும் அனைத்து 

வழிகளிலும் முயன்றுகொண்டே இரு!


இனியபாரதி. 

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

களம் கண்ட வீரன்...

அவள் களம் கண்ட வீரன் அவன்!

ஒரே நாளில்

ஒரே நொடியில்

அவளிடம்

தோற்றுப்போன 

வீரன்!


இனியபாரதி. 




வெள்ளி, 6 ஜனவரி, 2023

பௌர்ணமி...

வட்டமாய் ஆன

அவளது வெள்ளை முகம்!

காணாமல் போயிருந்த

என்னவளைக் கண்டுபிடித்தேனென்று

மார்தட்டும் வான்வெளி!

அவளின் மேடுகளும் பள்ளங்களும்

அவள் முக அழகோ என்னவோ?

என்றும் கறைபடாத அவளின்

களங்கமற்ற பால்முகம்!

என்னையும் கிறங்கடிக்கினறது!


இனியபாரதி.

வியாழன், 5 ஜனவரி, 2023

நானும் அவளும்...

அவளிடம் நான் அதிகம் இரசித்த தருணங்கள்... 

உண்ணும் போது நடனமிடும்

அவளது கழுத்துக் குழல்!

தரை தொடாமல் 

தவழும் அவள் பாதங்கள்!

களைந்து போகா அவள்

கூந்தல் வரிசை!

இடைவிடாமல் என்னை இழுக்கும்

அவள் ஸ்பரிசம்!

கண் இமைக்கும் நொடியில்

மின்னி மறையும்

அவள் புன்னகைப்பற்கள்!

தடவிச் செல்லும் அவள் சிறுவிரல்கள்!

அவளுடன் நான்!!! 

- காற்று


இனியபாரதி.