உடைந்த நிலாக்கள் என்ற பா.விஜய் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து நான் ரசித்த சில வரிகள்.
1). ஓர் அழகான பெண்ணை
ஓர் ஆண்
அசட்டையாகப் பார்ப்பதில்லை!
ஓர் அழகான பெண்
ஓர் ஆணை
மரியாதையாகப் பார்ப்பதே இல்லை!
2). அதிகம் பேசுகிறவனுக்குப்
பகைவன்
அவன் நாக்கில் இருக்கிறான்!
அதிகம் கோபிப்பவனுக்குப்
பகைவன்
அவன் பிடிவாதத்தில் இருக்கிறான்!
அதிகம் யோசிப்பவனுக்குப்
பகைவன்
அவன் குழப்பத்தில் இருக்கிறான்!
---நன்றி ஆசிரியர் அவர்களே!
1 கருத்து:
Very Excellent.
கருத்துரையிடுக