பெரும்பாலான நேரங்களில், நாம் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது 'என்னை அவர்கள் மதிக்கிறார்களா?' என்பது தான்..
மதிப்புக் கிடைப்பது கூட
1. நம் உடைகளைப் பார்த்து
2. நம் பணத்தைப் பார்த்து
3. நம்மிடம் சொந்த வீடு இருக்கிறதா என்பதைப் பார்த்து
4. நாம் நல்ல நிலையில் இருக்கிறோமா என்பதைப் பாhத்து
5. அழகாய் இருக்கிறோமா என்பதைப் பார்த்து
6. என்ன வேலை செய்கிறோம் என்பதைப் பார்த்து...
இப்படிப் பார்த்துப் பார்த்து என்று அடுக்கிக் கொண்டே போகலாம்..
இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்யும் நமக்கு, எப்படி ஒருவரை மதிக்க வேண்டிய குணம் கிடைக்கும்?
ஒருசில நேரங்களில் விலங்குகளை மதிக்கும் அளவிற்கு, மனிதர்களை மதிப்பதில்லை.... வீட்டில் பெட் என்ற பெயரில் பலவிதமான விலங்குகள், பறவைகளை வாங்கி வளர்க்கிறோம்.. அவைகளை நம்மில் ஒருவராகப் பார்க்கிறோம்.. அதில் தவறொன்றும் இல்லை... ஆனால், இப்படி வளர்ப்பவர்களில் எத்தனை பேர், மனிதர்களை மதிக்கத் தவறியிருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்...
சரி... என்னிடம் மதிக்கும் குணம் இருக்கிறதா? இல்லையா? அதை எப்படி புரிந்து கொள்வது? வளர்த்துக் கொள்வது?
மதிக்கும் குணத்தைக் கற்றுக் கொள்ள எந்த வகுப்பிற்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை... பணம் கட்ட வேண்டிய அவசியமில்லை...
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும், நம் சொந்தங்களாக எண்ணி, அவர்கள் சூழ்நிலையில் நான் இருந்தால்.. என்பதை மட்டும் சிந்தித்தாலே போதும்.. நம்மில் தானாகவே மதிக்கும் குணம் வந்துவிடும்...
தயவுசெய்து மற்றவர்களை மதிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வோம்..
இனிய வணக்கங்களுடன்...
இனியா.