பெண்ணே!
உன் உச்சந்தலையின் வகுடுகள்
உன் கூந்தலை மட்டும் இரண்டாகப் பிரிக்கவில்லை!
'நீ நன்மை, தீமைகளை ஆய்ந்துணர்பவள்'
என்பதைக் குறிக்கின்றன!
உன் காது மடல்கள்
'உன் கவலைகளைக் கேட்க
நான் காத்திருக்கிறேன்'
என்கின்றன!
உன் அமுதவாய்
'ஆறுதல் மொழிகளை அள்ளி வீசுகின்றன!'
உன் நாசிக்குழல்கள்
'மற்றவர்களுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றன!'
உன் அழகுக் கண்கள்
'பார்வையால் யாவர் மனதையும் கவர்கின்றன!'
உனதிரு கைகள்
'விரித்துக் கொடுப்பதிலும்,
விழுந்தவர்களைத் தூக்கிவிடுவதிலும்
ஆர்வமாய் இருக்கின்றன!'
உன் கால்கள்
'மற்றவர்களைக் கரையேற்றி விடுவதிலும்,
அவர்களுக்கு வழிகாட்டியாக
உன் பாதத் தடங்களைப் பதிக்கவும்,
என்றும் அயராது உழைக்கின்றன!'
உன் ஒவ்வொரு உறுப்பும்
மற்றவர்களுக்கு
உதவும்
குணநலன்களைக்
கொண்டிருப்பதே உன் சிறப்பு!
பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்களுடன்...
ஜெனி