கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
சனி, 2 ஜனவரி, 2016
வெள்ளி, 1 ஜனவரி, 2016
குழந்தையின் ஸ்பரிசம்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்று முதல், கதையை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், 3 ஆம் தேதி முதல் எழுதலாம் என்று முடிவெடுத்தேன். அதுவே சரியாகவும் இருக்கும்.
நம்மில் பலர் 'நான் குழந்தையாகவே இருந்திருக்கலாம்... எந்தக் கவலையும் இல்லாமல்!!! என்று கூறுவதுண்டு'. அப்படிக் குழந்தைப் பருவத்தில் என்ன தான் இருக்கின்றது? ஏன் அனைவரும் குழந்தையாகவே இருக்க விரும்புகிறோம்?
பிறந்த குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தொடும் போதே, நம் மனதிலுள்ள அனைத்தும் மறந்து, நாமும் ஒரு குழந்தையைப் போல் ஆகிவிடுகிறோம்.
அதன் குட்டி விரல்களை, நம் கைக்குள் அடக்கி வைக்கும் போது, ஏதோ உலகத்தையே கைக்குள் அடக்கிய ஒரு பெருமை கொள்கிறோம்.
குழந்தை தூங்கும் போது, அதை இரசிக்கக் கூடாது என்று கூறுவார்கள். அது எதற்கு என்று நேற்று தான் கண்டுபிடித்தேன். அது, தூங்கும் போது ஒரு குட்டி ஏஞ்சலைப்போல்(தேவதை) காட்சி தருகிறது. அந்தக்குட்டி ஏஞ்சலைப் பார்க்கும் நாம், அதைக் கண்வைத்து விடுவோமோ என்று நினைத்து தான், தூக்கத்தில் இரசிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.
குட்டிக் குழந்தையின் தூக்கம், ஒரு நிம்மதியானத் தூக்கமாக இருக்கும்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஒய்யாரமாக காலைத் தூக்கிக் கொண்டு, கைவிரலைச் சூப்பிக் கொண்டு அழகாய்த் தூங்கும்.
அதற்குத் தான் மட்டும் தான் அழகு என்ற கர்வம் இருக்காது. ஆனாலும், அது தான் அவ்வளவு அழகாய் இருக்கும்.
மேனியில் பால் வாசம் மட்டும் தான் இருக்கும். அந்த வாசத்தை எவ்வளவு விலை கொடுத்தும் நம்மால் வாங்க முடியாது.
அதன் இதழ்கள் என்றும் வறண்டதில்லை. அதன் வாயில் மட்டும் தேனமுதம் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கும் போல....
குழந்தை சிரிப்பது எதற்கென்று தெரியாது... ஆனால், அது என்னைப் பார்த்துத் தான் சிரிக்கிறதென்ற கர்வம் வேறு... நமக்கு
வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை..
பிறர் சொல் தான் கேட்க வேண்டுமென்ற நெருக்கடி இல்லை..
.
தான் விரும்பும் நேரத்தில் தூங்கலாம்..
தான் விரும்பும் நேரத்தில் விளையாடலாம்..
தான் விரும்பும் நேரத்தில் உண்ணலாம்...
எல்லாம் அதன் விருப்பப்படி தான் நடக்கும்.
அதன் கொஞ்சு மொழி கேட்க அனைவரும் தவமிருப்போம்.
இப்படி அனைத்து நல்ல குணநலன்களையும், தன்னகத்தே கொண்ட குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு இருக்கும் நமக்கும், பல நேரங்களில் நேரம் செல்வதே தெரியாது.
நம் வாழ்விலும், பல குட்டிக் குழந்தைகள் கடந்து சென்றிருக்கலாம். அந்தக் குட்டி ஏஞ்சல்கள் அனைவரையும் இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்ப்போம்.
நம் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும்.
அன்புடன்
இனியா

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)