பிறந்த போது தெரியவில்லை
நீங்கள் தான் என் முதல் ஆசானென்று...
சிறு வயதில்
நீங்கள் கொடுத்த அடி மட்டும் தான் ஞாபகமிருக்கிறது...
வளரும் பருவத்தில்
நீங்கள் வாங்கிக் கொடுத்த சிறு பொம்மை இன்னும் நினைவிருக்கிறது...
முதல் முறை நீங்கள் இதய வலியால் துடித்தபோது
வலித்தது உங்கள் இதயம் மட்டுமல்ல...
எம்மூவரின் இதயமும் தான்!
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பார்கள்!
எங்களுக்கு 'அன்னையே முன்னறி தெய்வம்'.
ஏனென்றால்,
நீங்கள் இருவருமே எங்களுக்கு அன்னையாய்த் தான் தெரிகிறீர்கள்!
இதுவரை வாங்கித் தர முடியாதென்ற வார்த்தையே
உங்கள் வாயிலிருந்து வந்ததில்லை!
சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்து
நீங்கள் வாங்கிக் கொடுத்த கொலுசின் மணியோசைகள் கூட
இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை!
'நீ என் செல்லம்! நீ என் உயிர்!'
என்று எங்கள் இருவரையும் அடிக்கடி கொஞ்சிக் கொள்ளும் நீங்கள்
அம்மாவிடம் சொல்லும் ஒரே சொற்றொடர்...
'பிள்ளைகளுக்கு என்ன பிடிக்குமோ, வாங்கிக் கொடு'
காய்ச்சலால் தவித்த என்னைக் காண
விடுதிக்கு வந்தபோது என்னைப் பார்த்து
உங்கள் கண் கலங்கிய தருணம்
மீண்டும் உங்களுக்கே மகளாய்ப் பிறக்க
வேண்டுமென்றுத் தோன்றியது.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு...
ஒரு நாள் என்னை அடித்து விட்டேனென்று
நீங்கள் அழுதது தான்...
என் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்தியது.
என்னை மன்னித்து விடுங்கள் டாடி...
இனி உங்களைக் காயப்படுத்த மாட்டேன்.
இன்று போல் என்றும் நீங்கள்
மகிழ்வுற்று வாழ
எங்கள் உளம்கனிந்த வாழ்த்துகள்!
என்றும் அன்புடன்...
ஜெனிமா, குட்டிமா...