வியாழன், 2 அக்டோபர், 2014

நல்ல தோழியாய்!!!

அன்பு என்னும் ஆடையினை
புதிதாக அணியும் போது
எழுகின்ற வாசம் தான் நட்பு.
மழையின் வருகையால்
மண் தன் உணர்ச்சிகளை
வெளிப்படுத்தும் போது
எழுகின்ற மணம் போன்றது நட்பு.
இருள் வருகையால்
ஒளி மறைகின்றபோது தோன்றுகின்ற
நட்சத்திரக் கூட்டங்களுக்கு
அரணாய் இருக்கின்ற
நிலவைப் போன்றது நட்பு.
மண்ணுக்குள் இருக்கும் வேரின் வளர்ச்சியினால்
அழகான மலரை விளைக்கின்ற
மலர்ச் செடியினைப் போன்றது நட்பு.
வாழும் நாட்கள் வானம் போல்
பழகிய நாட்கள் வானவில்லாய்
மனத்தில் வண்ணங்களாக
எண்ணங்களைத் தோன்றச் செய்வது நட்பு.
அன்னம் பாலை நீரிலிருந்து பிரிக்கும்
நட்பு மனதை தீமையிலிருந்து பிரிக்கும்
அருவியிலிருந்து விழுகின்ற நீர்
தரையில் விழும் போது
எழுகின்ற இசையைப் போல்
இனிமைவாய்ந்த நட்பைப் பெறுவது கடினம்!
நல்ல நட்பைப் பெறுவது
பாடும் பறவையைப் போல்
பேசும் விலங்கைப் போல் அபூர்வமானது!
காற்றில் மிதந்து வரும்
இனிய இசையை இரசிக்க
மனம் இருந்தால்
நட்பையும் இரசிக்கலாம்!

நல்ல தோழியாய்!!!