செவ்வாய், 17 ஜூன், 2014

பெண்ணே நீ!!!

பெண்கள் எப்பொழுதுமே ஆண் வர்க்கத்திற்கு ஒரு கேலிப் பொருள் தான். என்ன தான் பெண்ணானவள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினாலும், ஆணானவன் ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு பெண்ணையும் அடிமைப்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றான். பெண் ஒரு விசயத்தைப் பற்றி ஆயிரம் முறை யோசிப்பவள். தான் செய்வது சரி என்றுத்தன் மனம் சொல்வதைத் தான் செய்வாள். 
பெண் சக்தியானவள். 
எல்லாமுமாய் இருப்பவள். 
பெண்மை அதிசயம்.
பெண் போற்றப்படவேண்டியவள்.
தியாகத்தின் உருவம்.
பலவாறு பெண்மையையும், பெண்ணையும் போற்றினாலும் சில அடங்காத பெண்களும் இருக்கத்தான் செய்கின்றோம்.
எல்லோரும் பெண்மையைப் போற்றி எழுதுவார்கள். சிலர் விமர்சிப்பார்கள். ஆனால்.... இந்த சில அடங்காத பெண்களைப் பற்றி யாரும் பேசியதுமில்லை... விமர்சித்ததுமில்லை...
அடங்காத பெண்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1) வீட்டிற்கு அடங்காத பெண்கள்
2) சமூகத்திற்கு அடங்காத பெண்கள்
வீட்டிற்கு அடங்காத பெண்களை ஒரு வகையில் சமாளித்து விடலாம். ஆனால்... சமூகத்திற்கு அடங்காத பெண்களை அடக்குவது மிகக் கடினம்.
எப்படி நாம் இவர்களை சமுதாயத்திற்கு அடங்காத பெண்கள் என்று சொல்கிறோம்?
1) தன்னால் இயலாததை தன் கணவன் அல்லது பிள்ளைகள் மீது திணிப்பது
2) தன் பேச்சைத் தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற உணர்வு
3) தனக்குத் தேவையானவை அனைத்தும் நடக்க வேண்டும்
4) தன் ஆசை நிறைவேற வேண்டும்

பெரும்பாலும் பெண்கள் எப்பொழுதும் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று பேசுபவர்கள். என் நண்பன் ஒருவன் என்னிடம் ஒருமுறை கேட்டான், பசங்க லவ் பண்றேன்னு சொல்லும் போது பிடிக்கலைனா முடியாதுன்னு ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியது தான் சரி. நீங்க அப்படி பண்றீங்களா? பசங்க இப்படி இருக்குறதுக்கு பொண்ணுங்க தான் காரணம்னு சொன்னான். பெண்கள் ஏற்றுக் கொள்ளாமல் எதுவும் அவர்களுக்கு நடக்காது. நாம் செய்யும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாம் தான் பொறுப்பாளிகள். நாம் நம்மை அறியாமல் சில நேரம் செய்யும் தவறுகளை இறைவன் ஏற்றுக்கொள்வார். தெரிந்தே தவறு செய்வதைத் தவிர்ப்போம்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நமக்கும் நம் குடும்பத்திற்கும் தான் பலனைத் தரும்.

வித்தியாசமான பெண்ணாக இருப்பதில் தவறில்லை....

வித்தியாசமாக இருப்பது தான் தவறு!!!

பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்!